முடியாது என்றால் இன்றைய நாள் சாதாரண நாளாக கடந்து போகும்.. ஆனால் முடியும் என்றால் இன்றைய நாள் சரித்திரத்தில் கூட இடம்பிடிக்கலாம்...
1 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக, 14 மணி நேரம் செல்ல க்கூடிய 500 கிமீ தூரத்தை 6.45 மணி நேரத்தில் சென்று குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளார் ஆம்புலன்ஸ் டிரைவர் சமீம். கேரளாவில் இதய நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையை சிகிச்சைக்காக கண்ணூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு 6.45 மணி நேரத்தில் கொண்டு சேர்த்துள்ளார் சமீம்.
வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் செய்தி பரப்பப்பட்டு செல்லும் வழி எங்கும் காவலர்கள் மற்றும் பொதுமக்களால்
போக்குவரத்து சீரமைக்கப்பட்டு இந்த பயணம் சாத்தியப்பட்டுள்ளது.
போக்குவரத்து சீரமைக்கப்பட்டு இந்த பயணம் சாத்தியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval