சவுதி அரேபியாவில் 11 இளவரசர்கள் மற்றும் 12 முன்னாள் அமைச்சர்களை, பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சவுதி அரேபியாவில் மன்னராட்சி நடந்து வருகிறது. அரசின் முக்கிய பொறுப்புகளில் மன்னர் குடும்பத்தினரே இருந்துவருகின்றனர். மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான், பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பின் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஊழலுக்கு எதிராக அவர் தலைமையில் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக இந்த கமிஷன் செயல்படும் என்று கூறப்பட்டது. இந்த கமிஷன் அமைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, கோடீஸ்வரரும் இளவரசருமான அல் வாலீத் பின் தலால் உட்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னாள் அமைச்சர்கள் 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்செய்தியை, சவுதி அரேபியாவின் அல்-அரேபியா சேனல் வெளியிட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி ...அரப்நியூஸ்
ஒரே நேரத்தில் 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி ...அரப்நியூஸ்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval