Sunday, August 27, 2017

கோரக்பூரை தொடர்ந்து ஜார்கண்ட் அரசு மருத்துவமனையில் 52 குழந்தைகள் பலியானது அம்பலம்


கோரக்பூரை தொடர்ந்து ஜார்கண்ட் அரசு மருத்துவமனையில் 52 குழந்தைகள் பலியானது அம்பலம்ஜார்கண்ட் மாநிலம் ஜம்சத்பூர் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 30 நாட்களில் 52 பச்சிளம் குழந்தைகள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் 5 நாட்களில் 60 குழந்தைகள் இறந்தன. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கர்நாடகவில் உள்ள கோலார் அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 90 குழந்தைகள் இறந்த சம்பவமும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்திய நிலையில், தற்போது ஜார்கண்ட் மாநில அரசு மருத்துவமனையில் 30 நாட்களில் 52 பச்சிளம் குழந்தைகள் பலியானது அம்பலமாகியுள்ளது.

ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக குழந்தைகள் இறந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், மேலும் பல குழந்தைகளுக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் பற்றி அங்கு விசாரணை நடந்து வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இதுப் போன்ற குழந்தைகளின் இறப்பு செய்தி பெற்றோர்களை கலக்கமடைய செய்துள்ளது.

கடந்த 117 நாட்களில் 164 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval