அஸ்ஸலாமு அலக்கும்
நிய்யத்தும்,ஒரு வயது செம்மறிஆடு (அல்லது) இரண்டு வயது வெள்ளாடு -(அல்லது) இரண்டு வயது மாடு, (அல்லது) ஐந்து வயது ஒட்டகையுமாகிய இவற்றுல் ஏதாவது ஒன்று அறுப்பதாகும். துல்ஹஜ்ஜு மாதம் பிறை பத்தில் பெருநாள் தொழுததிலிருந்து பிறை பதிமூன்று அஸறு தொழுகைவரை
கொடுக்கலாம்.இவற்றில் முடமாகவோ,குருடாகவோ
பிணியாகவோ முதலிய தீங்கில்லாத பிராணியாக
இருக்க வேண்டும்.அறுத்த கறியை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கை தானும் தனது பங்காளிகலும்,இரண்டாவது பங்கை குடும்பத்தாருக்கும்,மூன்றாவது பங்கை ஏழைகளுக்கும் கொடுப்பது வாஜிபாகும்.
குர்பானி கொடுப்பதில் இரண்டு சுன்னத்துகள் உண்டு அவை
(1) துல்ஹஜ்ஜு மாதம் பிறை கண்டதிலிருந்து குர்பானி கொடுக்கும் வரைக்கும் முடி இறக்காமலும், நகம் வெட்டாமல் இருப்பதும்
(2) தன் கையால் அறுப்பதுமாகும் (மற்றொருவரை வைத்து அறுத்தால் அறுத்து முடியும்
வரை அருகில் நிற்க வேண்டும் கத்தியை எடுக்காமல் தொடர்ந்து அறுப்பது சிறந்தது)
மாடு,ஒட்டகைகளை ஏழு பேர் சேர்ந்து கூட்டில்வாங்கிக் கொடுக்கலாம்.உடையவன் இதில்கொஞ்சம் உண்பது நன்மையாகும்.
குர்பானி கொடுக்கும் மாமிசத்தை விலைக்கு விற்பதும்,காபிர்களுக்கு கொடுப்பதும் உரித்தவர்களுக்கு கூலிக்காக மாமிசத்தை கொடுப்பதும் ஹறாமாகும்
அறுப்பதில் ஒன்பது சுன்னத்துகளுண்டு அவை; அறுக்கப்படும் பிராணியை மெதுவாக
இழுத்து வருதலும் அதற்குத் தண்ணீர் கொடுத்தலும்,அறுப்பவர் ரசூல்(ஸல்)அவர்களுக்கு
சலவாத்தும்,சலாமும் சொல்லி பிஸ்மில் சொல்லுதலும்.அறுப்போறும்,அறுக் கப்படுவதும்
கஃபாவை முன்னோக்கிக் கொள்ளுதலும்,அறுக்கப்படுவதின் வலது பக்கம் மேலாக இடது
பக்கத்தைக் கீழாக்கிக் கொள்ளுதலும்,அறுக்கும் கருவியை தீட்டிக் கூராக்கிக் கொள்ளுதலும் குரல்வளையைச் சுற்றின நரம்பு இரண்டையும் அறுத்தலும்,ஒட்டகையை
நான்கு கால்களையும் நெறுக்கிக் கட்டிக்கொள்ளுதலும்,ஆடு ,மாடுகளை மூன்று கால்களைப் பிடிதுக்கொள்ளுதலும்,முடியாவிட் டால் கால்களை கட்டிக்கொள்வதுமாகும்
குரல்வளை முடிச்சிக்கு மேலே அறுத்தலும்,பிடரிப்புறம் அறுத்தலும் தொடர்பாய் அறுக்காமல் கருவியை எடுத்தெடுத்து அறுத்தலும் ஒன்றை அறுத்த கருவியை கழுவாமல் மற்றொன்றை அறுப்பதும் ஹறாமாகும், அதை உண்பதும் ஹறாமாகும்.
அறுப்பதில் மக்றூஹூகள் பத்துண்டு அவை; சிறு பிள்ளை அறுப்பதும்,கண்பார்வைஅற்றவர்கள் அறுப்பதும் புத்தி சுவாதீனம் இல்லாதவர் அறுப்பதும்,மது உண்ணடவர்அறுப்பதும்,பிஸ்மில் சொல்லாமல் அறுப்பதும்,இரவில் அறுப்பதும்,அறுக்கபடும் பிராணி
பார்க்க கருவியை தீட்டுவதும் ஒன்று பார்க்க மற்றொன்றை அறுப்பதும்,உயிர் போகுமுனஅதன் உறுப்புக்களை அறுப்பதும்,துடிக்க விடாமல் அமுக்கிக் கொள்ளுதலுமாகும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது மார்க்கத்தை புரிந்து நடந்துகொள்ள அருள்புரிவானாக ஆமீன்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval