Monday, August 21, 2017

அன்பு நண்பர்களே, நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்...

Image may contain: 5 people, people smiling, people standing4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த என் அத்தை ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட, கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை,8ல் இருந்து 10 லகரம் ஆகும் என அறிவித்தனர். மிரண்டு போன மாமா செய்வதறியாமல் திகைத்த நிலையில், அங்கேயே இருந்த ஒரு நல்லிதயம் கொண்ட மருத்துவர் ஒரு நல்ல ஆலோசனை வழங்கினார்.
"மிகச்சிக்கலான இந்த அறுவைசிகிச்சை இங்கே மாதம் ஒன்றோ இரண்டோ நடக்கும் நிலையில், தினமும் ஐந்து -பத்து சாதாரணமாக நடக்கும் திருவனந்த புரம் அரசு மருத்துவமனைக்கு ( Thirvendram Medical college Hospital) உடனே எடுத்துச்செல்லுங்கள்", எனக்கூறினார். உடன், ஒரு கடிதமும் வாங்கிக்கொண்டு ஆம்புலன்ஸில் விரைந்து காலையில் அட்மிட் செய்துள்ளனர். உடனே, அட்மிஷன் செய்து நோயாளியின் தன்மைக்கேற்ப பரிசோதனைகள் செய்து, அறுவை சிகிட்சைக்குத் தேவையான மருந்துகள் மட்டும் வாங்கித் தரச்சொல்கின்றனர்.( ஒரு 40000 to 60000 ஆகலாம்) டாக்ட்டர் பீஸ் இல்லை. சரியாகி வீடு திரும்பியும்வரை அட்மிஷன் தருகிறார்கள்.
உணவு,மருந்து மாத்திரைகள் நாமே வாங்கிக் கொள்ளவேண்டும்.
நண்பர்களே, ஏதோ நம் ஊர் அரசு மருத்துவமனையை மனதில் நினைத்துக்கொண்டு அசட்டாயாக இராதீர்கள். உலகத்தரம் வாய்ந்த, இராணுவக்கட்டுப்பாடுடன் கூடிய மருத்துவமனை அது. இதயம்,நரம்பு, முளை போன்ற மிகச்செலவு பிடிக்கும் வியாதிகளுக்கு மிக மிக சிறப்பான , செலவு மிக மிக குறைந்த மருத்துவமனை. அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
முதலில் செல்லும்போது உதவிக்கு 3,4 நபர்களோடு செல்லுங்கள். ரத்தம் கொடுக்கும்படியான வைத்தியமாக இருந்தால் ரத்தம் கொடுக்கும் நிலையில் உள்ள 5 பேர் கூட இருப்பது சிறப்பு. எந்த குரூப்பாக வேண்டுமானாலும் இருக்கலாம். ரேஷன் அட்டை, ஆதார் அட்டை கொண்டு செல்லுங்கள். நகை நட்டை விற்று, வீடு தோட்டம் விற்று, நீண்ட நாள் சேமிப்பை இழக்காமல் சிறந்த சிகிட்சையைப் பெறலாம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள். அனைவரும் பயன் பெறுங்கள்.
(forwaforwarded as received)
திருவனந்தபுரம் வாழ் தமிழ் நண்பர்களே இச்செய்தியை விசாரித்து உண்மைத்தன்மையை comment பண்ணினால் உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval