#குக்கர்_உஷார்
#கேஸ்_ஸ்டவ்_உஷார்
இன்று எனது மனைவி தாயார் நான் மூன்றுபேரும் வீட்டில் குக்கர் வெடித்ததில் பலியாகியிருப்போம் எனது மனைவி இன்று காலை பிரஷ்ஷர் குக்கரில் கொண்டைகடலையை வேகப்போட்டுவிட்டு சமையலுக்கான வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள் எனது வீட்டுமுதலியம்மா கூப்பிட்டார்கள் என்று வெளியே சென்றார் நானும் இன்று அதிகாலை தான் இராம்நாட்லிருந்து வந்ததால் களைப்பில் தூங்கிகொண்டு இருந்தேன் எனது தாயரும் நடக்கமுடியாதவர் திடிரென பயங்கர வெடிச்சத்தம் நான் தூக்கத்திரலிருந்து பித்து பிடித்ததுபோல வெளியே ஓடுகிறேன் ஆனால் அண்டைவீட்டு ஆண்களும் பெண்களும் எங்களது வீட்டிற்குள் ஓடி வருகிறார்கள் அப்போது தான் புரிகிறது எனது வீட்டில் தான் குக்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்து கேஸ் கசிந்து கொண்டு இருந்தது உடனே நான் தவழ்ந்து சென்று கேஸ் ஆப் செய்து விட்டேன் இல்லையென்றால் இன்று நாங்கள் இறந்திருப்போம் அல்லாஹ் காப்பாற்றினான் வீட்டில் குழந்தைகளும் இல்லை ஆனால் எனது மனைவி அடுப்படி யில் இருந்திருந்தாலும் உடலில் முகத்தில் ஸ்டவ் குக்கர் பல பகங்களாக வெடித்து சிதறியதில் படுகாயம் அடைந்து இருப்பார்கள்.😭😰
எனது மனைவியும் தாயாரும் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னுமே மீளவில்லை.
சகோதரிகளே குக்கர் விசிலை கவணமாக கையாளுங்கள் உங்களது விலைமதிப்பில்லாத உயிரை காப்பாற்றி உங்களது குடும்பத்தாரையும் காப்பாற்றுங்கள் நாமது தொழுகை தானம் தர்மம்தான் நம்மை காப்பாற்றுகிறது படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval