Monday, August 7, 2017

What's App ல் வந்த பதிவு தான் .... ஆனால் ஏனோ இதயம் வலிக்கிறது நமது நாட்டின் அவல நிலை கண்டு

Image result for india map images100 ரூபாய் லஞ்சம் வாங்கியவன் 
  கைதாகும்போது, முகத்தைப் 
  பொத்திக் கொண்டு செல்வதும்,
  100 கோடி ஊழல் செய்தவன்
  கைதாகும்போது, டாட்டா காட்டியபடி
  சிரித்துக் கொண்டே  செல்வதும்  ,  சிரித்தபடியே  ஜாமீனில்  வெளியே  வருவதும்  
  இந்த நாட்டில்தான்    நடக்கிறது  ....
            
* சாதரணமாய் பிக்பாக்கெட் 
அடித்தவனுக்கு சிறையில் 
கொசுக்கடியுடன்,நாலைந்து பேர்
தங்கும் சுகாதாரமற்ற அறையில் 
இடம் தருவதும்..,
கோடி கோடியாய் ஊழல் செய்த 
வழக்கில் தண்டிக்கப்பட்டவனுக்கு,
டிவி வசதியுடன் சொகுசு 
அறை தருவதும் 
இந்த நாட்டில்தான்...! 

*கஷ்டப்பட்டு பட்ட மேற்படிப்பு படித்தவர்கள்    வேலையில்லாமல் திண்டாடுவதும்,
5 ஆம் வகுப்புகூடப்  படிக்காமல்,  
கல்வி அமைச்சர் ஆகிப்  பல கல்லூரிகளைத்  தங்கள்  பெயரிலேயே      நடத்துவதும்
இந்த நாட்டில்தான்...! 

*அரிசியை விளைவித்த விவசாயியோடு  பொது  மக்களும்  அரிசிக்காக ரேஷன் கடையில்  வரிசையில் நிற்பதும்  , 
ஆபாச வழக்கில் சிக்கிய 
ஆசிரமச் சாமியார்களிடம்    ஆசி பெற,  அரசியல்வாதிகளும்  ,  பெரிய  மனிதர்களும்  
வரிசை கட்டி நிற்பதும்
இந்த நாட்டில்தான்...!

* கோடிக்கணக்கில் வங்கிக் கடன்
  வாங்கியவன், அதைக் கட்டாமல்,
  வெளிநாட்டுக்குக்  தப்பிச் செல்வதும்,
  ஆயிரக்கணக்கில்  மட்டுமே  கடன் வாங்கிய
  விவசாயி அதைக் கட்ட முடியாமல்,
  விஷம் குடித்துச்  சாவதும்
  இந்த நாட்டில்தான்...!

* தண்ணீர் கேட்டு
  போராடுபவர்கள் மீது 
  தடியடி நடத்துவதும், 
  மதுவிலக்கை அமுல்படுத்த
  அழுத்தம் கொடுத்தால்,
  மதுக்கடைக்கு காவல்துறை  
  பாதுகாப்பளிப்பதும் 
  இந்த நாட்டில்தான்...!

*தேசப்பிதாவைக் கொன்றவனை 
தேசத் தலைவனாகக் கொண்டாடுவதும், 
தேச நலனுக்காகப் போராடுபவன் மீது 
தேசத் துரோக வழக்குப்  பாய்வதும் 
இந்த நாட்டில்தான்...!  

* ஜனநாயகம் என்ற பேரில், 
  சர்வாதிகார ஆட்சி நடப்பதும், 
  சாமானியர்களின் அரசு என்ற பேரில்,
  சாமியார்களின் ஆட்சி நடப்பதும் 
  இந்த நாட்டில்தான்...!  

எங்கே  போகிறது  என்  நாடு ???  என்ன  ஆனார்கள்  என்  நாட்டு  மக்கள்  ???????

(  துணிவோடு  இந்த  உண்மை  நிலையினைக்  கூறியவர்  யாராக  இருந்தாலும்  அவசியம்  நாம்    வாழ்த்த  வேண்டும்  )  வாழ்த்துக்கள்  சகோதரனே  ......

தகவல் ;இ ர்ஃபான் 
அதிரை 

Inline image

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval