ஆனா கடந்த ஏழு வருஷமா காயே பிடிக்கல ..
என்னென்னு ஆராய்ச்சி எல்லாம் செஞ்சேன்..
ஒரு வேளை எரு பற்றாக்குறையால காய்க்கலையோ,
தென்னை மர நிழல்னால காய்க்கலையோ,
வர்றவங்க போறவங்க எல்லாம் "வீட்டுக்கு முன்னாடி மா மரம் ஆகாது "னு சொன்னதால காய்க்கலையோ,
சத்து குறைபாடினால காய்க்கலையோ னு பலபல சந்தேகங்கள் மனசுல ஓடீட்டே இருந்துச்சு..
ஒருத்தர் சொன்னார் "செத்து போன நாயோ, பூனையோ ஏதாவது ஒன்னை மரத்தடியில புதைச்சிடுங்க கண்டீப்பா அந்த மா மரம் காய்க்கும்னு..
ஒரு நாய் ரோட்ல அடிபட்டு கிடந்ததை எடுத்து வந்து (வீட்டுக்கு தெரியாம) புதைச்சு பார்த்தேன்..
ஒன்னும் பலனில்ல..
சரி வேறு வைத்தியம் பார்க்கலாம்னு
பஞ்சகவ்யாவிலிருந்து பாஸ்போ பேக்டீரியாவரை எல்லா தாக்குதலையும் நடத்தி ஒன்னுமே பலன் கொடுக்கல...
யோசிச்சேன்
யோசிச்சேன்..
நல்லா யோசிச்சேன்..
என்னடா இது வேலி முள் விளைஞ்ச நிலத்தில்கூட விவசாயம் செய்கிறோம்..
நல்லா காய்ச்சிட்டு இருந்த மரம் இப்படி ஆகிடுச்சேனு மண்டையை போடு உடச்சிட்டு இருந்தேன்..
அப்போ ஒன்னு என் ஞாபக்கத்துக்கு வந்தது..
வீட்ல அம்மா கையில் துவைக்கிறது கஷ்டம்னு என் தந்தை "வாசிங் மிஷின் "வாங்கி வச்சது சிறு மூலைக்கு எடுச்சு..
அதுக்கு சோப்பு பவுடர் ரின், பவர் அது இதுனு போட்டு கொட்டீட்டு இருந்ததும் ஞாபகம் வந்தது..
அந்த இயந்திரம் வந்ததிலிருந்துதான் அந்த மாமரம் காய்ப்பதில்லைனும் ஒரு மாசத்துக்கு முன்தான் என்னோட பெரு மூலைக்கும் எட்டுச்சு..
காரணம் என்னனு பார்த்தா அந்த இயந்திரத்திலிருந்து போகிற கழிவு நீரும், சமையல் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் விம் பாரும் நேரா அந்த மாமர ஆனி வேரிலையே போய் ஊத்தீட்டு இருந்த விசயம் மரமண்டைக்கு உரைச்சது..
உடனே அந்த சோப்பு பவுடரும், விம் பாரும் வாங்கிறத நிறுத்தினேன்..
வேப்ப எண்ணெயில் தயாரான காதி சோப்பை வாங்கி அந்த இயந்திரத்தில் போட்டேன்,பாத்திரம் கழுவ அடுப்பு சாம்பலை பயன்படுத்தினோம்..
என்ன ஆச்சரியம் இப்போ அந்த மாமரம் துளிர் விட்டு பச்சை பசேல்னு தளஞ்சிட்டு இருக்கு ..
நல்லா யோசிங்க.
என்னோட ஒரு வீட்டின் கழிவுநீரிலே நாற்பது வயது மாமரத்தை பட்டு போக வைக்கும் அளவுக்கு விஷம் நீரை நான் இத்தனை நாளா பயன்படுத்தி நிலத்தை பால்படுத்தி வந்திருக்கேனா,அப்போ நகரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவங்க எத்தனை
மரத்தத்தையும், மணணையும் போக வச்சிருப்போம்..?
Adirai
மரத்தத்தையும், மணணையும் போக வச்சிருப்போம்..?
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval