Sunday, August 13, 2017

*எச்சரிக்கை பதிவு*உஷார்! உஷார்! உஷார்!*

 வளைகுடாவில் இருந்து தாயகத்திற்கு (இந்தியாவிற்கு) கார்கோ மூலம் பொருட்களை அனுப்புபவர்களே! *உஷார்! உஷார்! உஷார்!*                          கடந்த ஜூலை மாதம் *தம்மாமில் இருந்து போஸ்ட் ஆஃபீஸ் கார்கோ மூலம் காயல்பட்டணத்தை சேர்ந்த சகோதரர் ஒருவர் சுமார் 1400/-  ரியால் மதிப்புள்ள* புதிதாகக் கட்டும் தமது வீட்டுக்கு தேவையான *Door Locks, Handles, போன்ற Hardware Materials களை கிலோவுக்கு 10.00 ரியால் கட்டி சுமார் 30-கிலோ* கார்கோ சாமான்களை அனுப்பி உள்ளார். அது *காயல்பட்டணம் Post Office க்கு சுமார் 10-நாட்களில் வந்து சேர்ந்தவுடன்*  Post Office லிருந்து வீட்டுக்கு போன் செய்து *GST மொத்தம் ரூ.26,000/-* கட்டி Delivery எடுத்துக் கொள்ளுமாறு கூறி உள்ளனர். *இது பற்றி தம்மாம் போஸ்ட் ஆஃபீஸில் ஒன்றும் கூறாமல் திடீரென்று GST வரியாக ரூ.26,000/- கட்டுமாறு சொன்னவுடன்* எவ்வளவோ எடுத்துக் கூறியும் சம்மதிக்காததால் *வேறு வழியின்றி நொந்து போய் ரூ.26,000/-* கட்டி பொருட்களை எடுத்து விட்டனர். இதன் மூலம் *பொருளின் மதிப்பு + கார்கோ சார்ஜஸ் + GST ஆகிய மூன்றும் சேர்ந்து மூன்று மடங்கு கூடுதலாகி கடும் நஷ்டம்.*  ஆகவே வளைகுடா வாழ் சகோதரர்களே! *நீங்கள் உங்களுடைய வீட்டுக்கு இனி எந்தப் பொருளையும் கார்கோ மூலம் அனுப்பும் முன்பே அது பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டு அனுப்பவும். இதன் மூலம் பண நஷ்டத்திலிருந்தும், மனக் கஷ்டத்திலிருந்தும் தவிர்ந்து கொள்ளலாம்.*

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval