நிஜமாக சிலர் ஹீரோக்கள் தான் ! சற்று முன்னர் சைப்பிரஸ் நாட்டில் இருந்து 173 பயணிகளோடு புறப்பட்ட விமானம். புயல் காற்று மையம் கொண்டிருந்த வான் பரப்பில் சுமார் 1,300 அடி உயரத்தில் பறக்க ஆரம்பித்தது. அந்தவேளை திடீரென வானில் இருந்து வந்த பனிக் கட்டி(ஹெயில் ஸ்டோன்) ஒன்று விமானத்தின் முன் பகுதியை தாக்கியது. வழமையாக பனிக் கட்டிகள் உருவாகி நிலத்தி வீழ்வது உண்டு. ஆனால் குறித்த பனிக் கட்டி கல் போல மிகவும் இறுக்கமான ஒன்றாகவும். அளவில் பெரியதாகவும் இருந்துள்ளது.
இதனால் விமானத்தின் முன் பகுதி கடும் சேதமடைந்த அதேவேளை. கண்ணாடியும் சேதமடைந்துள்ளது. இதனால் தரையை பார்க்க முடியாத நிலை தோன்றியது. விமானத்தை உடனே விமான நிலையம் நோக்கி திருப்பிய விமானி, கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பு கொண்டு, விமானத்தை தரை இறக்க முற்பட்டுள்ளார். கட்டுப்பாட்டு அறையில் இருந்து என்ன தான் அறிவித்தல் வந்தாலும். விமானி கண்ணாடியூடாக தரையைப் பார்த்தால் தான் , விமானத்தை சரியாக தரையில் இறக்க முடியும்.
இருப்பினும் கண்ணால் பார்க்க முடியாமல், ஒரு வழியாக விமானத்தை தரை இறக்கி 173 பயணிகள் உயிரையும் விமானி காப்பாற்றி உள்ளார். சொல்லுங்கள் உண்மையில் இவர் ஒரு ஹேரோ தானே. இவர் பெயர் கேப்டன் அலெக்ஸ்ஸாண்டர் அக்கோபோவ்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval