பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிகழ்ந்த சாலை விபத்தில், தமிழகத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
லண்டனில் பக்கிங்ஹாம்ஷயர் நெடுஞ்சாலையில், மினி பஸ் மீது 2 கன்டெய்னர் லாரிகள் மோதியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில், 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், இருவர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 3 பேர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் என்றும், 3 பேர் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மினி பஸ்சை ஓட்டிய கேரளாவை சேர்ந்த இளைஞரும் உயிரிழந்தார். விபத்தை அடுத்து, காயமடைந்த 4 பேரை மீட்டு, பர்மிங்ஹாமில் உள்ள மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இதில், 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் மண்டபத் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம், அவரது தங்கை தமிழ்மணி மற்றும் அவரது தங்கை கணவர் அறச்செல்வம் ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தை தொடர்ந்து 2 கன்டெய்னர் லாரிகளின் ஓட்டுநர்களை லண்டன் போலீஸார் கைது செய்தனர். இதில், ஒருவர் மதுபோதையில் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம், என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval