செய்த தவறுகளால் தமிழ்நாடே கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு அம்மா உடைத்து சென்றார். பல திட்டங்கள் இலவசமாக அளித்து 28% ஓட்டு போட்டவர்களுக்காக 72% பேரின் பணம் வீணாகக் கரைக்கப் பட்டது.
கோபம், ரோஷம், ஆணவம், பழி தீர்த்தலே அரசாளும் முறையாக இருந்தது.
இதே காலகட்டங்களில் பரம ஏழை மாநிலமாக இருந்த கேரளா முன்னேறி இன்று இந்தியாவின் பணக்கார மாநிலமாக முன்னேறி விட்டது. த.நாட்டில் ஊழல் அதிகமாகி ஐடி தொழில் கர்நாடகாவில் கொடிகட்டி பறக்கிறது.
தமிழனுக்கு எச்சில் இலைகளே பசியாற போடப் படுகிறது.
கூலித்தொழிலாளிகள் மட்டுமே இருந்த ஆந்திராவை பில் கேட்ஸ் வரவழைத்து ஹைதராபாத்தை ஒரு சிலிகான் வேலி ஆக்கிக் காட்டினார் சந்திரபாபு நாயுடு.
நாயுடு எனக்கு எது கிடைத்தாலும் மக்கள் பணி செய்வேன் என்று அமராவதியை தலைநகராக்கி, நான்கு ஆறுகளை ஒரே வருடத்தில் யாரிடமும் கை ஏந்தாமல் தன் கஜானா பணத்தில் இணைத்து வறண்ட மாவட்டங்களை வளமாக்கி உள்ளார்.
மேலே சொன்ன *எந்த மாநிலமும் சைக்கிளோ,* *மடிக் கணினியோ, இருசக்கர வாகனமோ, கேஸ் அடுப்போ, மின்விசிறி, மிக்ஸி கொடுத்து மக்களிடம் ஆட்சி உரிமையைக் கோரவில்லை.*
ஏன்? *தமிழ்நாடு மட்டும் இத்தனை இலவசங்கள் தருகிறது? 63% வரிப்பணம் இலவச திட்டங்களுக்காம்! பணத்தை விவசாயிக்கு ஏன் செலவிடவில்லை? உள்ளூர் நதிகளை ஏன் இணைக்கவில்லை?*
நாளைக்கு குழாயில் தண்ணீர் வராது என்றால் இருக்கும் காலி பாத்திரங்களில் நீர் சேமிக்கும் தமிழனின் அதே புத்தி ஆளும் அரசுக்குத் தோன்றாதது ஏன்?
*ஏரி குளங்கள் தூர் வாருவதை விட, பொங்கலுக்கு ரெண்டு துண்டு கரும்பை ரேஷன் கடையில் கொடுப்பதை ஏன் பெருமை பீற்றிக் கொண்டார்கள்?*
ராஜபக்ஷே இலங்கையில் தமிழ் இனத்தை அழித்தார்.
தமிழ்நாட்டை, தமிழனை அழித்தது யார். ஒரு நடிகனின் முதலமைச்சர் பதவி மோகத்துக்கு மாநில நலனை பலி கொடுத்தது யார். ஓட்டு போடுவதை ஒரு சமுதாய கடமையாக பார்க்காமல், விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட தமிழக வாக்காளன் தானே.
*நாளை சரித்திரம் சொல்லும்போது குடித்து சீரழிந்த தமிழன் பிணத்தின் மேல் இலவச வேட்டி போர்த்தி, மின்சாரம் இல்லாமல் இயங்க மறுக்கும் இலவச மின் விசிறி அருகில் பசியோடு குழந்தைகள் இழவை கவனிக்காமல் தட்டைத் தூக்கிக் கொண்டு பள்ளியில் இலவச மதிய உணவு உண்டு விட்டு கொள்ளி போட வரும் அவல நாள் தூரத்தில் இல்லை!*
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval