கானா நாட்டின் ஒரு கிராமவாசியான இவர் சில மாதங்கள் முன் ஒரு காட்டு வழியே நடந்து வருகையில், ஒரு ஆளில்லா சிறிய ரக விமானம் ஒன்றை பறந்து வந்து அவர் பாதையில் விழுகக் கண்டார்.
அது துருக்கி நாட்டை சேர்ந்த ஒரு ஊடகவியலாளருக்கு சொந்தமானது. அதை தேடி அவ்விடம் வந்த அந்த ஊடகவியலாளர் கைகளில் அந்த ஆளில்லா சிறிய ரக விமானத்தை ஒப்படைத்து விட்டு...
அந்த உலகமறியா கானா நாட்டு கிராம வாசி ஹசன் அப்துல்லா சிறு பிள்ளை போல வெகுளியாக கேட்டார் "இந்த விமானம் என்னை என் இறைவனிடம் மக்காஹ் நகருக்கு அழைத்துச் செல்லுமா" என்று..!
இந்த கேள்வி அந்த ஊடகவியலாளரை பாதித்து விட இதை செய்தியாக்கி துருக்கி நாட்டு ஊடகங்ளில் பரப்ப... துருக்கி நாட்டு அரசே நேரடியாக தலையிட்டு அந்த மனிதரை ஹஜ் பயணத்திற்கு அனுப்பியுள்ளனர்!
உள்ளங்களின் ஓசைகளை அறிந்த எல்லாம் வல்ல இறைவனின் உதவி நாம் எங்கிருந்த போதிலும் நம்மை வந்தே தீரும்! அந்த நியதி உமக்கு எமக்கு உலகிலுள்ள அனைவருக்கும் பொருந்தும்!
Hasan Abdullaah | Ghana | Makkah | Haj 💞
நன்றி சகோ சுல்தான் சலாகுதீன்..
காப்பி:-Shaik Abraj
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval