Sunday, August 27, 2017

இனி இதற்கெல்லாம் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்படாது... மக்கள் ஹேப்பி #RightToPrivacy

சென்னை: ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால் இனி இந்த திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்க முடியாது.
ஆதார் கார்டால் தனி நபர் அந்தரங்கம் மீறப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தனி மனித அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையே என்று அதிரடியாக அதுவும் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இந்த தீர்ப்பினால் ஆதார் கார்டு கட்டாயமாக்க முடியாது என்றாலும் கூட மத்திய அரசே இதற்கெல்லாம் ஆதார் அவசியம் என்று அளவுகோல் வைக்கும் பட்சத்தில் மட்டுமே அது கட்டாயமாக்கப்படும். இனி எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை என்பதை பார்ப்போம்.
  • வங்கிக் கணக்குகள் தொடங்குதல்
  • பான் எண்ணுடன் இணைத்தல்
  • வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல்
  • இலவச ஆம்புலன்ஸ் வசதி பெறுதல்
  • காசநோயாளிகள் சிகிச்சை பெறுதல்
  • சமையல் எரிவாயு மானியம் பெறுதல்
  • வீடு கட்ட மானியம் கோரி விண்ணப்பிக்கும் பீடி, இரும்பு, சுண்ணாம்பு பணியாளர்கள்
  • குழந்தைகளுக்கான சத்துணவு திட்டம்
  • விவசாயிகளுக்கான நலதிட்டங்கள்
  • பயிர் காப்பீடு திட்டம்
  • விதைகளுக்கான மானியம்
  • கல்லூரிகளில் கல்வி உதவித் தொகை பெறுதல்
  • சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் (6 வயது முதல் 14 வயது வரை)
  • ரயில்களில் முன்பதிவு செய்தல்
  • சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள்
  • ஜனனி சுரக்ஷா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண்கள் நிதியுதவி பெறுதல்
  • பான் அட்டை பெறுதல்
  • சிம் கார்டு, செல்போன் வாங்குதல்
  • இறப்பு சான்றிதழ் பெறுதல்
  • பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள்
  • பங்குகளை வாங்குதல், பரஸ்பர நிதி முதலீடு செய்தல்
மேற்கண்ட திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதார் கார்டு அவசியமாக்கியது. உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ள தீர்ப்பால் இனி இதற்கெல்லாம் ஆதார் கட்டாயமில்லை என்று தெரிகிறது.
courtesy ;one  India 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval