Thursday, August 10, 2017

முக்கியமான விழிப்புணர்வு பதிவு.......*

பெரும்பாலும் இந்த விஷயத்தில் யாரும் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் நம்முடையப் பொருளாதாரம் திட்டமிட்டு மின்சார வாரியத்தால் சுரண்டப்படுகின்றது.

ஆகவே இதன் முக்கியத்துவத்தைக் கருதி, இந்தக் கட்டுரையின் சாராம்சத்தை தமிழில் தருகின்றேன்.

மின்சார வாரியம், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சார ரீடிங் எடுப்பதால் மிகப் பெரிய பொருளாதார நஷ்டம் நமக்கு ஏற்படுகின்றது......

உதாரணத்திற்கு ,

500 யூனிட் வரை பயன்படுத்தியதற்கு கட்டணம் ரூ.1330.

அதே நேரத்தில் ஒரு யூனிட் கூடுதலாக வந்தால் (501 யூனிட் ) அப்பொழுது கட்டணம் ரூ.2127.

ஒரே ஒரு யூனிட் கூடுவதால், நமக்கு ஏற்பட்ட கூடுதல் செலவு ரூ.797.

யோசித்துப் பாருங்கள்.... நம்மை அரசு எவ்வாறு சுரண்டுகின்றது என்று........?

ஆக, *ஒவ்வொரு மாதமும் மீட்டர் ரீடிங் செய்யப்பட்டால், நம்முடைய மின்சார கட்டணம் குறைவு........!*

மேலும்..........,

இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது (60 நாட்களுக்கு ஒரு முறையாவது) மீட்டர் ரீடிங் பார்க்க சரியாக வருகின்றார்களா .....? என்று சொன்னால் நிச்சயமாக இல்லை........

*இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 28 அல்லது 29 ந் தேதி ரீடிங் பார்க்க வர வேண்டிய ஊழியர், இந்த மாதம் 31ந் தேதி வந்ததால் பல வீடுகளில், இந்த மாதம் மட்டும் மின் கட்டணம் ஆயிரக்கணக்கில் வந்துள்ளது.*

ஆகவே இந்த அநியாயத்திற்கெதிராக குரல் கொடுக்க வேண்டியது மட்டுமல்ல போராடவும் முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval