Saturday, March 17, 2018

எஸ்பிஐ வங்கியில் 3 லட்சத்தை கொள்ளை அடித்து செல்லும் 12 வயது சிறுவன் சிசிடியில் பதிவான காட்சி

12 வயது மதிக்க தக்க சிறுவன் எஸ்பிஐ வங்கியிலிருந்து 3 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து செல்லும் சம்பவம் உபி மாநிலம் ராம்புரில் நடைபெற்றுள்ளது.
3 லட்சம் ரூபாய் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்டதை அறிந்த வங்கி அதிகாரிகள் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது நேற்று 12 மணி அளவில் சிறுவன் கையில் பையுடன் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு அவசரமாக வங்கியை விட்டு வெளியே காட்சி பதிவானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து ராம்புர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து போலிசார் அந்த சிறுவனை தற்போது தேடி வருகின்றனர்.
சிசிடிவி காட்சியில் இறுதியாக அவன் செல்லும் போது தன்னை யாரும் கவனிக்கின்றார்களா என
அவன் திரும்பி பார்ப்பதும், அவன் வாசலை விட்டு வெளியேறியதும் ஒரு பெண் அவனை திரும்பி பார்ப்பதும் பதிவாகியுள்ளது.
”கொள்ள சம்பவத்தில் சிறுவன் மீது தான் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. கொள்ளையர்கள் சிறுவனை வைத்து கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் இது குறித்து விசாரனை நடத்தப்பட்டு” என அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து செல்லும் அளவில் தான் தேசத்தின் மிகப் பெரிய வங்கியான SBI ன் பாதுகாப்பு உள்ளதா ? வரையரை இல்லாமல் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதில் காட்டு கவனத்தை அவர்களது பணத்தை பாதுகாப்பதிலும் காட்ட வேண்டும் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval