Saturday, March 10, 2018

கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்படும் காட்சி கொலை செய்யும் முன் தோழிகளுடன்

திருச்சியில் கர்ப்பிணி பெண் உஷா பலியான சம்பவத்தின் வலி மறைவதற்குள் நேற்று சென்னை கேகே நகரில் ஒரு பலி சம்பவம் அனைவரையும் பதர வைத்துள்ளது.
காதல் விவகாரத்தில் காதலனால் கொல்லப்பட்ட அஸ்வினியின் தாய் ”என் தேவதையை சாகடித்து விட்டானே அவன சும்மா விடாதீங்க” என கதறும் காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்கின்றது.
பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின் வாங்கிக் கொண்டனர்.
அஸ்வின் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சாலையில் உயிருக்கு போராடிய படி விழுந்து கிடக்கின்றார் அஸ்வினி.
மேலும் அஸ்வினி கொலை செய்யப்படுவதற்கு முன் தன் தோழிகளிடம் மகிழ்ந்நி விளையாடும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.
”காதல் , இந்த பெயரை சொல்ல எத்தனை கொலைகள். காதலிக்கும் போது ”என் உயிர் நீ தான்” என இனிக் இனிக்க பேசுபவர்கள் ஒரு கட்டத்தில் அந்த உயிரையே எடுத்து விடுகின்றார்கள்.
பெண்கள் சிலர் இன்றைக்கு திருமணத்திற்கு முன்னரே கண்ணி தன்மையை இழக்கும் நிலை அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் கூறுவதும் காதல் என்ற பெயரில் நடக்கும் கொலைகளும் எதை காட்டுகின்றது ? பெற்றோர்கள் பிள்ளைகளை கவனிக்க தவறுகின்றார்கள். பெண்கள் பருவ வயது மாற்றத்தால் காதல் என்ற பெயரில் கொடூரன்கள் கையில் சிக்கி பலியாகும் சம்பவங்கள் அதிகரிக்கின்றது.
ஆரம்பத்தில் ஒருவருடன் பழகுவது பின்னர் அவர் பிடிக்கவில்லை எனக் கூறி அடுத்தவருக்கு தாவுவது என ஆண் பெண் இருவருக்குமிடையே இன்றைக்கு ப்ரேக்கப் என்ற வார்த்தை சர்வசாதரணமாகியுள்ளது.
இப்படி இன்றைக்கு காதல் என்பது வேறு பாதையில் செல்வதால் தான் இது போன்ற சம்பவங்கள் அறங்கேறுகின்றது.
ஒரு புறம் சட்டம் கொலை செய்தவனை விசாரனை விசாரனை என்ற பெயரில் சோறு தங்குமிடம் கொடுத்து பராமறிக்கின்றது. இது கொலை செய்யும் முன் ஏற்பட வேண்டிய அச்சத்தை போக்கிவிடுகின்றது.
பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் ஆண் பெண் இருவருக்கும் சுய கட்டுப்பாடுகள் வேண்டும்.
படிக்க வேண்டிய நேரத்தில காதல் என கொஞ்சி விளையாடி விட்டு பின்னர் குடும்பம் நடத்த வேண்டிய நேரத்தில் கணவனை் மனைவி அடித்துக் கொள்ளும் காலமாகிவிட்டது இந்த காலம்.
சுய கட்டுப்பாடு. குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை இந்த இரண்டுமே இது போன்ற சம்வங்களை தடுக்கும்” என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொலை செய்ததை அவனே ஒத்துக் கொண்டான் இதற்கு பிறகும் விசாரனை என இழுத்தடிக்காமல் தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என பலர் கோரிக்கை வைதது வருகின்றனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval