
ஆனால் நான் மருந்து வாடைகூட படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். செடி நட்டு 25ஆவது நாள், வண்டு செடியை தாக்கி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் , 1000 செடியில் சுமார் 500 செடி மட்டுமே பிழைத்தது.35ஆவது நாள் வண்டின் தாக்கம் அதிகமாக இருந்தது. இனி விட்டால் எல்லா செடியும் படுத்துவிடும் என்றநிலை! 40தாவது நாளில் ஒருசெடிக்கு 3-4 வண்டுகள். 500 செடி 400 ஆக குறைத்தது. ஆனால் நான் மருந்து அடிக்கவில்லை.யோசித்தேன் வேப்பெண்ணை 200 ml, கல்லுப்பு 2 kg, 3 குடம் தண்ணீரில் கலந்து ஒவ்வொரு செடியாக தெளித்தேன். மறுநாளே ஒருவண்டைகூட காணவில்லை. இன்று 80ஆவது நாள், இதுவரை ஒரு வண்டு, புழு கூட இல்லை. இதுவரை உள்ளூரில் 20 பூ கொடுத்திருப்பேன், அனைவரும் சொன்னது " பூவில் ஒரு புழுகூட இல்லை நேற்று பூவை புளியம்பட்டி சந்தையில் விற்றுவிட்டேன் . வியாபாரிகள் சொன்னது பூ மஞ்சளா இருக்கு, வெள்ளைய இருந்ததன் வாங்குவாங்க. நானும் சில காலம்வரை வெள்ளையா இருந்தாதான் நல்லப்பூ என்று நினைத்தேன். வெயில் அதிகமாக இருந்தால் மஞ்சள் அடிக்கும், தண்ணீர் பத்தவில்லையென்றால் pink அடிக்கும்.
நான் முதலில் காளிபிளார் பயிர் செய்ய காரணம், அதிகம் மருந்தடிக்கும் செடியை நம்மால் இயைக்கை முறையில் செய்யமுடியுமா என்றறியதான்.
கண்டிப்பாக முடியும்
courtesy;facebook
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval