Thursday, March 1, 2018

சிரியா போர் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என்ன சொன்னார் தெரியுமா?

தவறு சிரியா மக்களுக்கு உதவும் கனடா- வீடியோ
டமாஸ்கஸ்: சிரியாவில் நடக்கும் போருக்கு எதிராக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த போர் குறித்து பல முக்கியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் இதுவரை 700 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

உதவி உதவி

 போர் காலத்தில் பாதிக்கப்படும் அகதிகளுக்கு கனடா இடம் அளிக்கும். இலங்கை போரில் பாதிக்கப்பட்ட பல தமிழர்கள் தற்போது கனடாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல் சிரியா போர் விவகாரத்திலும் அந்நாட்டு அரசு மக்களுக்கு ஆதரவான நிலையே எடுத்துள்ளது.

தவறு

சிரியா அரசும், ரஷ்ய ஈராக் படையும் அங்கு இருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது பெரிய தவறு என்று கனடா பிரதமர் ஜஸ்டின் கூறியுள்ளார். மக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இது மனிதர்கள் செய்ய கூடிய செயலே இல்லை என்றுள்ளார்.
நிறுத்துங்கள்

நிறுத்துங்கள்

அதேபோல் இந்த போரை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதன்படி ''இந்த மோசமான போரை உடனடியாக நிறுத்த வேண்டும். அங்கு மருத்துவ உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு வசதியாக அங்கு இருக்கும் படைகள் திரும்ப பெற வேண்டும்'' என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
போராட்டம் நடக்கிறது

போராட்டம் நடக்கிறது

ஏற்கனவே கனடாவில், சிரிய போருக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. கனடாவில் நிறைய சிரியா மக்களும், இஸ்லாமிய மக்களும் வசித்து வருகிறார்கள். அவர்கள்தான் தற்போது இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
courtesy;One India

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval