Wednesday, March 14, 2018

உலக சாதனை படைத்துள்ள தமிழக இஸ்லாமிய பெண் விஞ்ஞானி டாக்டர் பாத்திமா பெனாசிர்...

Image may contain: 1 person, indoor
திருநெல்வேலி பேட்டையை சேர்ந்த டாக்டர் பாத்திமா பெனாசிர் அவர்கள் DNA பரிசோதனைக்கு இயற்கை மருந்து (ஜெல்) கண்டுபிடித்து உலக சாதனை படைத்துள்ளார்...
டாக்டர் பாத்திமா பெனாசிர் அவர்கள் என்ற தனியார் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், இந்திய அறிவியல் கழக (Indian Institute of Science) மையத்தில் ஆராய்ச்சி பணியிலும் ஈடுபட்டு வருகிறார்...
அவர் மேற்கொள்ளும் ஆராய்ச்சி உலக அளவில் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பரம்பரையாக தொற்றும் கொடிய நோய்கள் குறித்தும், உடனடியாக அதன் மூலத்தை தெரிந்து கொள்ளும் வகையில், புதிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டார்...
அதன் பலனாக 'டென்டோராங்' (Tento Rong) என்ற பெயரில் DNA பரிசோதனைக்கு இயற்கை ஜெல் கண்டுபிடித்துள்ளார்...
உலகில் கண்டுபிடிப்புகள் எத்தனையோ இருந்தாலும் DNA மற்றும் RNA கண்டுபிடிப்பு மிக முக்கியமான ஒன்றாகும்...
இப்படிப்பட்ட கண்டுபிடிப்பில் தான் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் பாத்திமா பெனாசிர் உலக சாதனை படைத்துள்ளார்...
அவரின் இயற்கை ஜெல் கண்டுபிடிப்பின் மூலம் கேன்சர், தோல்நோய், குடல்நோய், மஞ்சள் காமாலை, நீரிழிவு நோய், போன்ற தீரா வியாதிகள் எவ்வாறு உருவாகிறது என்பதை துல்லியமாக கண்டுபிடிக்கும் விதமாக அமைந்துள்ளது...
இதுகுறித்து பெண் விஞ்ஞானி
டாக்கர் பாத்திமா பெனாசிர் கூறும்போது...
" எங்களது இந்த கண்டுபிடிப்பானது 100
சதவீதம் இயற்கையோடு ஒன்றியதாகும்.
இது ஜெல் வகையை சார்ந்ததாகும், மேலும்
எங்கள் கண்டுபிடிப்பு மற்ற கண்டுபிடிப்பை
விட மிக விரைவில் அடையாளம்
காணக்கூடிய ஒன்றாகும்...
Image may contain: 1 person, outdoor
அதாவது DNA பரிசோதனைக்கு பிற
வேதியியல் பொருட்கள் பயன்
படுத்தும்போது 10 முதல் 40 நிமிடம் வரை
ரிசல்ட் கிடைக்க நேரம் ஆகும், ஆனால்
எங்களின் இந்த இயற்கை
கண்டுபிடிப்பானது, 30 நொடிகளில்
அடையாளம் கண்டுபிடிக்கும் ஆற்றல்
பெற்றுள்ளது...
No automatic alt text available.














எங்கள் கண்டுபிடிப்பு மற்ற கண்டுபிடிப்பை
விட ஏழு மடங்கு வீரிய வேகம்
கொண்டதாகும். மேலும் மற்ற
கண்டிபிடிப்புகள் வேதிப்பொருட்களால்
ஆனவை. அவைகள் அனைத்தும் DNA வின்
அமைப்பை (Structure) உருவாக்கும்.
ஆனால் இந்த இயற்கை கண்டுபிடிப்பானது
DNA அமைப்பை (Structure) முழுவதும்
தெரியாமல் குணமாக்கும் என்று கூறினார்."
இந்த கண்டுபிடிப்பின் உரிமத்தை இந்திய அரசிடமிருந்து எதிர்நோக்கியுள்ளார், உரிமம் கிடைக்கும் பட்சத்தில் DNA வின் இயற்கை கண்டுபிடிப்பை கண்ட உலகின் முதல் இந்திய பெண் விஞ்ஞானி என்ற பெருமைக்குரியவர் என்ற பட்டியலில் இடம் பெற்று நமது இந்திய நாட்டிற்கும், நம் இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பெருமை சேர்ப்பார் என்பதில் பெருமை கொள்கிறோம்...
அல்லாஹ் அவர்களுக்கு இன்னும் பல புதிய ஆராய்ச்சிகளிலும் வெற்றியடைய அருள் புரிவானாக !

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval