Friday, March 30, 2018

சிறந்த ஆசிரியருக்கான விருது


Image may contain: 1 person.நெல்லை மாவட்டம்,கடையநல்லூர் ஒன்றியம்,நெடுவயல் ஸ்ரீ சிவசைலநாத நடுநிலை பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் திரு.முகமது உசேன் பள்ளிக்கு காலையிலே 8.15 மணிக்கே பள்ளிக்கு வந்து விடுவார்.அவருடைய 31 ஆண்டு பணி காலங்களில் இது வரை மொத்தமாக 15 நாட்கள் விடுமுறையே எடுத்துள்ளர்.இதில் மருத்துவ விடுப்போ,சமய விடுப்போ இது வரை எடுத்தது இல்லை.பள்ளியில் ஆண்டு விழாவின் போது விடுமுறை எடுக்காத ஆசிரியர்களுக்கான விருதினை தொடர்ந்து பல ஆண்டுகளாக பெற்று வருகிறார். காலம தவறாது பள்ளிக்கு வருகிறார்,பள்ளி நேரங்களில் முன் அனுமதியே பெற்றது கிடையாது.மாணவர் ,ஆசிரியர் அனைவரிடம் அன்பாக பழகுவார்.கோபம் என்பதே இவரிடம் பார்க்க முடியாது.செல் போன் கூட இவரிடம் கிடையாது,மிகவும் எளிமையானவர். யாரவது உதவி என்று கேட்டால் தன்னிடம் இருப்பதை கூட கொடுத்து விடுவார்.மாலையில் பள்ளி முடிந்தவுடன் கதவுகளை எல்லாம் பூட்டி விட்டுத்தான் செல்வார்,விடுமுறை நாட்களில் பள்ளியில் கட்டிட வேலையோ மற்ற வேலைகளோ இருந்தால் வேலை முடியும் வரை உடன் இருப்பார். இவரது திருமணத்திற்க்கு கூட விடு முறை எடுக்கவில்லை,திருமணம் இரவில் நடை பெற்றது.ஒரு முறை தனது மனைவியின் அம்மா இறப்பின் கூட மதிய வேளையில் கலந்து கொண்டு பள்ளி திரும்பி விட்டார்.தன்னுடைய சாப்பாட்டை அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பார்.பள்ளி வந்தவுடன் மோட்டர் முலம் தண்ணிரை நிரப்பி மாணவர் குடிப்பதற்க்கும்,மற்ற உபேகித்திற்க்கும் எடுத்து வைப்பார்.அனைவருக்கும் சிறியவர்,பெரியவர் என்று பார்க்காமல் இரு கை கூப்பி வணக்கம் செலுத்துவார்.பொதுவாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலை பார்க்கும்ஆசிரியர்களுக்கும்,நிர்வாகத்திற்க்கும் சுமுகமான உறவு இருக்காது ஆனால் ஒரு முறை கூட நிர்வாகத்துடன் பிரச்சனை இருந்தது இல்லை. ஆண்டு தோறும் பள்ளி நிர்வாகம் சிறந்த ஆசிரியருக்கான விருதை வழங்கி வருகிறது.இப்பட பட்ட ஆசிரியரை பெற்ற எங்கள் பள்ளி பெருமை அடைகிறது. பள்ளி சார்பாக அவரும்,அவரது குடும்பமும்,நோய் நொடியின்றி வாழவும்,மேலும் அவரது பணி சிறக்கவும் வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval