இன்று காலை என் இருசக்கிர வாகனம் எரிபொருள் இல்லாமல் தீவு திடல் அருகே நின்று விட்டது. அங்கே போக்குவரத்து சமிக்ஞை மேற்பார்வை கொண்டிருந்த அதிகாரி திரு.தாமோதரன் என்னை அழைத்து என்னை நடத்திய விதம் மிக மிக அருமை, இப்படியும் போக்குவரத்து காவலர்கள் உள்ளனர் என்று மனம் குளிர்ச்சி அடைகிறது😀😀அவர் சிறிது நேரம் கூட என்னை வெயிலில் நிற்க விடவில்லை, ஏன் சார் வெயில்ல நிக்கிறீங்க இப்படி நிழல் ல வந்து நில்லுங்கன்னு ரொம்ப அக்கறையோடு பேசினார், நான் பார்த்த காவலர்கள் இவரை போன்று பேசியது இல்லை அதனால் தான் இப்பதிவு ..அதுவும் இல்லாமல் தன்னுடைய வாகனத்தில் இருந்து எரிபொருள் எடுத்து தருகிறேன் தாங்கள் பத்திரமாக சென்று வாருங்கள் என்றார். அதற்குள் நான் ஏற்கனவே எரிபொருள் வாங்கி வர சொல்லிருந்த என் அலுவலக நண்பர் வந்து விட்டார். நானும் திரு.தமோதரனிடம் கைகுலுக்கி இரண்டு செல்பி எடுத்துக்கொண்டு விடைபெற்றேன்.விடைபெறும் முன் நன்றி கூறியத்திற்கு அவர் சொன்னது, "தினம் ஓர் நன்மையை செய், நன்றியை எதிர்பாக்காதே" 😍😍 பணத்தை மட்டும் எதிர்பார்க்கும் காவலர் மத்தியில் இவர் ஒரு கதாநாயகனநான் இம்மாதிரி பதிவுகள் அதிகம் போட மாட்டேன்,ஆனால் இன்று அவரின் நல்ல உள்ளம் என்ன பதிவிட செய்தது. அவர் இந்த சேவையை தொடர்ந்திட என் பிரார்த்தனைகள்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval