Tuesday, March 6, 2018

வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை

Image may contain: 1 person, hat
வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை....
நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா?
உஷார்...
உங்கள் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் போன்றவை வங்கியில் வேலை செய்யும் சில கருப்பு ஆடுகளால்.....
நவீன இணையதள திருடர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது...
ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் நமது கணக்கு விவரங்கள் கைமாறுகிறது.....
அடுத்து....
உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரும்....
எதிர் முனையில் பேசும் அந்த மர்ம ஆசாமி (ஹைடெக் கொள்ளையன்).... ஒரு வங்கி அதிகாரி போல
மிகவும் பணிவான குரலில் பேசுவான்....
உங்கள் வங்கி கணக்கு எண்னை தெளிவாக சொல்லுவான்....
உங்கள் ஏடிஎம் கார்டின் வேலிடிட்டி முடியப் போவதாகவும்....
அதை தான் ஆன்லைனிலேயே சரிசெய்து தரப்போவதாகவும் பேசி உங்களை சுலபமாக நம்ப வைப்பான்....
அல்லது....
உங்கள் எல்ஐசி பாலிசியை புதுப்பித்துத் தரப்போவதாகவோ....
அல்லது உங்களை எளிதில் நம்ப வைக்கக்கூடிய ஏதாவது ஒன்றைக் கூறி அடுத்த விஷயத்திற்கு வருவான்...
அது என்னவென்றால்....
அவனுக்கு தேவை உங்கள் செல்போனுக்கு கடைசியாக வந்திருக்கும் ஒன் டைம் பாஸ்வேர்ட்,
அல்லது உங்கள் ஏடிஎம் கார்டில் இருக்கும் பதிமூன்று இலக்க எண்கள்...
அல்லது கடைசி நான்கு எண்கள்...
அல்லது உங்கள் பிறந்த தேதி...
இப்படி ஏதாவது ஒன்றை உங்களிடமிருந்து அவன் எதிரபார்ப்பான்.....
கொஞ்சம் ஏமாந்து நீங்கள் அவனுக்கு அதை சொல்லிவிட்டீர்கள் என்றால்....
உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் மொத்தப் பணமும் அடுத்த நிமிடமே காணாமல் போய்விடும்.
பிறகு நீங்கள் போலீஸில் புகார் கொடுத்தாலும், நீங்கள் இதுவரை ஏமாந்த முப்பதாயிரம் பேர்களில் ஒருவராகவே எண்ணப்படுவீர்கள்...
ஏனென்றால், இந்த ஹைடெக் கொள்ளையர்களை சைபர் க்ரைம் மூலமாக கூட கண்டுபிடிப்பது கடினம்...
சிம்கார்டு முதல் மெயில் ஐடி வரை எல்லாம் போலியாகவே வைத்திருப்பார்கள்...
நீங்கள் மறுபடியும் தொடர்பு கொண்டால், சுவிச்ட்ஆப் செய்யப்பட்டிருக்கும்
மாத சம்பளத்தை வங்கி மூலம் பெறுபவர்களே அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள்...
எனக்குத் தெரிந்தவரை என்னுடன் வேலை செய்யும் மூன்று பேருடைய பணம் இதே தொலைபேசி உரையாடல் மூலம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது
உங்களால் முடிந்தது ஒன்று தான்.....
இது போன்றவர்கள் கேட்கும் எந்த கணக்கு விவரங்களையும் கொடுத்துவிடாதீர்கள்...
எந்த வங்கியும் இதுபோன்ற விவரங்களை வாடிக்கையாளர்களிடம் கேட்பதில்லை....
இதுவரை நான் எழுதிய கட்டுரையை ஷேர் பண்ண சொன்னதில்லை....
முதல் முறை கேட்கிறேன்....
முடிந்தவரை இந்த ஸ்டேட்டஸை ஷேர் பண்ணுங்கள்...
நன்றி
பொதுநலன் கருதி.....
G.K.Kannan,
Inspector of police ,
S14 peerkankaranai ps

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval