பாஜக எம்.பி.யின் நிதியுதவியில் இயங்கிவரும் அறக்கட்டளை வழங்கவிருந்த விருதை கர்நாடக ஐஜி ரூபா வேண்டாம் ஏற்க மறுத்துவிட்டார். கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்தபோது, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக புகார் எழுப்பியவர் ரூபா.
இந்நிலையில், நேர்மையாக பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு, கர்நாடகாவைச் சேர்ந்த நம்ம பெங்களூரு எனும் அறக்கட்டளை விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் ரூபாவுக்கும் சிறந்த அரசு அதிகாரிக்கான விருது வழங்குவதாக நம்ம பெங்களூரு அறக்கட்டளை அறிவித்திருந்தது. ஆனால் அந்த விருதை ஏற்கமறுத்துள்ள ரூபா, அதை விளக்கி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஒரு அரசு ஊழியராக நடுநிலை காக்க விரும்புவதாகவும், இந்த விருதை ஏற்பதால் நடுநிலைத்தன்மைக்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். நம்ம பெங்களூரு அறக்கட்டளை, பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகரின் நிதியுதவியில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
courtesy;polimer news
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval