இன்று காலை குவைத்தில் பேங்க்கிற்கு செக் டெபாசிட் செய்ய போயிருந்தேன்
காலைநேர பிசியான வாழ்க்கையில அத்தனை அரபிகளும் அவங்கவங்க வேலைய பார்த்துகிட்டு
அப்போ இந்த ஒரு மனுசன் மட்டும் நெருக்கடியான பார்க்கிங் ஏரியாவுல நின்று'கிட்டு கைய காட்டி யாரையோ உத்து உத்து பார்த்துக்கிட்டு இருந்தார்
ஏதோ அரபி தெரியாம அட்ரஸ் கேட்டு தவிக்கிறார் போலிருக்கு'ன்னு நெனச்சி நான் அவருகிட்ட போய்
சொல்லுங்க சார் ஏதாச்சும் உதவி தேவையா ஏதும் அட்ரஸ் தேடுறீங்களா'ன்னு கேட்டேன்
அதுக்கு அவரு இல்ல'ப்பா நான் வந்த வேலை முடிஞ்சிடுச்சி என் காரை எடுக்க போறேன் அதான் பார்த்துகிட்டு இருக்கேன்'னு சொன்னார்
சரி சார் எடுக்குறதுன்னா எடுத்துட்டு போக வேண்டிய தானே! அதுக்கு நடுரோட்டுல நின்னு யார பார்த்துக்கிட்டு இருக்கீங்க'ன்னு கேட்டேன்
அதுக்கு அவரோ அப்படி இல்ல'ப்பா
இப்போ இந்த பார்க்கிங்'ல ஒரு இடம் கூட காலியா இல்ல எல்லாமே ஃபுல்லா இருக்கு
நீயும் நானும் ஆம்பள எங்கேயாவது சுத்தி முத்தி தேடி அழைஞ்சி எதாவது ஒரு இடத்துல காரை பார்க்கிங் போட்டுட்டு வந்துடுவோம்,
ஆனால் இங்க வர கூடிய பெண்களோட நிலைமைய பாரு! வயசானவங்க, கர்ப்பிணி பொண்ணுங்க'ன்னு இங்க எல்லோருமே செல்ஃப் டிரைவிங் பண்ணிகிட்டு வராங்க
அவங்க இந்த நெரிசல்ல பார்க்கிங் கிடைக்காம ஒரே இடத்தையே திரும்ப திரும்ப சுத்தி வந்து தவிச்சு போயிடுறாங்க,
அதனால அப்படி வர யாராவது ஒருத்தருக்கு என் இடத்த கை காட்டிட்டு என் காரை எடுத்துக்கலாம்'ன்னு ஒவ்வொரு காரையா உத்து பார்த்துகிட்டு இருக்கேன்'ப்பா'ன்னு சொன்னோர்😍
சார்! யுஆர் ரியல்லி க்ரேட் சார்
ரியல்லி ஐ அப்ரிஸ்யேட் யூ சார்'ன்னு சொல்லி கை குலுக்கிட்டு
நீங்க எந்த நாட்டுல இருந்து வந்துருக்கீங்க
இங்க எந்த கம்பெனியில ஒர்க் பண்றீங்க'ன்னு கேட்டேன்
இல்ல'ப்பா நான் எந்த கம்பெனியிலயும் வேலை செய்யல
நான் இந்த நாட்டிற்கு கனடாவுடைய இணை தூதர் 'ன்னு சொன்னார்
[Canadian Co-Ambassador In Kuwait]
மகிழ்ச்சிச்சியில் பூரித்துப்போய்
சார் உங்க மனிதாபிமானத்துக்கு ஒரு அளவே இல்லையா சார்!
அங்க உங்க ப்ரஸிடன்ட் மிஸ்டர் ஜஸ்டின் சிரியா முஸ்லிம்களை பார்த்து அழுது கண்ணீர் சிந்துகிறார்
இங்க நீங்க இந்த திமிரு பிடிச்ச அரபிங்களுக்கு உங்க வேலைய விட்டுட்டு நடுரோட்டுல நின்னு கைய ஆட்டிகிட்டு இருக்கீங்களே'ன்னு கேட்டுட்டு
உயிர கையில புடிச்சிகிட்டு ஓடி வர்ர மக்களுக்கு தங்க இடம் கொடுத்து அவர்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுறதோட மட்டும் இல்லாம
இன்னும் எத்தனை லட்சம் பேரு வேண்டாலும் வாங்க உங்களுக்கு குடியுரிமை கொடுக்கவும் பரிசீலிக்கிறோம்'ன்னு சொல்றாரே அந்த மனுசன்!
உண்மையிலேயே உங்க ப்ரஸிடன்ட்'டோட இந்த போர்க்கால பேருதவியை உலக முஸ்லிம்களாகிய நாங்கள் எக்காலமும் நன்றி மறக்க மாட்டோம் சார்...
உங்களுக்காகவும் உங்க நாட்டு பொருளாதார வளர்ச்சிக்காகவும் நான் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்கிறேன் சார்'ன்னு சொன்னேன்...
எந்தவித பெருமையையும் பேச்சில் காட்டாமல்
முகத்தில் புன்முருவல் சிரிப்புடன்
இட்ஸ் ஓகே மைடியர்'ன்னு தோள்ல தட்டிக்கொடுத்து அனுப்பி வைத்தார்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval