வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென் கொரிய தூதுக்குழு இன்று வட கொரியாவுக்கு புறப்பட்டுச் சென்றது.
தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு உயர் அதிகாரியான சுங் யூயி யோங் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு, வட கொரிய குழுவுடன் இன்று பேச்சுவார்த்தையை தொடங்குகிறது. வட கொரியாவுக்கு புறப்படும் முன்பாக தென் கொரிய தலைநகர் சியோலில் செய்தியாளர்களிடம் பேசிய சுங் யூயி யோங், அணு ஆயுதமற்ற பிராந்தியமாக கொரிய தீபகற்பம் திகழ வேண்டும் என்ற தென் கொரிய அதிபர் மூன் ஜேயின் விருப்பத்தினை பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்துவோம் என குறிப்பிட்டார்.
மேலும், வட கொரியா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். வடகொரியா அடிக்கடி அணு ஆயுத சோதனை நடைபெறுவதால் கொரிய தீபகற்பத்தில் போர் மூளூம் அபாயம் நிலவிவந்தது. மேலும் தென் கொரியா மீது வட கொரியா போர் தொடுக்கலாம் என்ற அபாயமும் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இடையே இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை முக்கியமானதாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval