ஹாங்-ஐ சேர்ந்த நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) கொண்ட அதிநவீன ரோபோ ஒன்றை வடிவமைத்து வெளியிட்டது. மனிதர்களை போன்றே தோற்றம் கொண்ட இந்த ரோபோ அமெரிக்காவில் முதன்முறையாக கருத்தரங்கு ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றியது.
ஷோபியா என பெயரிடப்பட்ட இந்த ரோபோவுக்கு கடந்தாண்டு குடியுரிமை வழங்கி சவூதி அரேபிய அரசு பெருமைப்படுத்தியது. இந்நிலையில், நாளை நேபாளத்தின் தர்பர்மார்க் நகரில் நடக்க உள்ள ‘பொதுமக்களுக்கான தொழில்நுட்பங்கள்’ என்ற பெயரில் கருத்தரங்கு நடக்க உள்ளது.
ஐ.நா சபையின் வளர்ச்சி திட்ட அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த கருத்தரங்கில், ஷோபியா ரோபோ பங்கேற்று உரையாற்ற உள்ளது. இதில், நேபாள அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப அறிஞர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். சிவில் சமூகம், உள்ளாட்சி அரசு, தனியார் பங்களிப்பு, இளைஞர்கள் நலன் உள்ளிட்ட பல தலைப்புகளில் பலர் உரையாற்ற உள்ளனர்.
சிறந்த தொழில்நுட்பம் உதவியுடன் நேபாளத்தை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்வதே இந்த கருத்தரங்கின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சவூதி அரேபியாவில் கடந்தாண்டு ஷோபியா ரோபோ ஆற்றிய உரையை கீழே காணலாம்.
Courtesy;Malaimalar
Courtesy;Malaimalar
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval