இந்தியாவில் 2 ஆண்டுகளில் 26,500 மாணவர்கள் தற்கொலை: தமிழகம் 2-வது இடம்
கடந்த 2014- 2016 காலகட்டத்தில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 26,500 மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ராஜ்யசபாவில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு மாணவர் தற்கொலை நடக்கிறது. இது மத்திய அரசுக்குத் தெரியுமா ? இதைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்று ராஜ்யசபாவில் திமுகவைச் சேர்ந்த எம்.பி.,கனிமொழி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், மத்திய குற்றவியல் ஆவணக்காப்பத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின் படி, கடந்த 2014 முதல் 2016 வரையிலான இரண்டு ஆண்டுகளில் மட்டும் 26,500 மாணவர்களின் மரணங்கள் பதிவாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களில் தற்கொலை மேலும் அந்த அறிக்கையில், ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருவது குறித்து வருத்தம் தெரிவித்த அவர், 2014ம் ஆண்டில் 8068 மாணவர்களும், 2015ல் 8934 மாணவர்களும், 2016ல் 9474 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். 2016ம் ஆண்டில் அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த மாணவர்கள் 1350 மாணவர்களின் தற்கொலை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்னைகள் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக, மேற்கு வங்காளத்தில் 1147 மாணவர்களும், அடுத்து தமிழகத்தைச் சேர்ந்த 981 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ராவிலும், தமிழகத்திலும் தான் அதிகப்படியான மாணவர்களின் தற்கொலைகள் பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியமாகக் கல்விச்சூழல் தான் காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தற்கொலைகள் அனைத்தும் மன அழுத்தம், கல்விச் சூழல் பிரச்னைகள், குடும்ப பிரச்னைகள், போட்டிச்சூழல், சமூக ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட காரணிகளால் நிகழ்ந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனிதா தற்கொலை பொருளாதார ஏற்றத்தாழ்வும், சாதிய ரீதியிலான பிரச்னைகள் சமீபத்தில் அதிகப்படியான மாணவர்களின் மரணங்களுக்கு காரணமாக இருந்துள்ளது.கடந்த 2016ல் ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை நாடு முழுவதும் பல்வேறு விவாதத்தை எழுப்பியது. அதன் மூலமே உயர்கல்வி நிறுவனங்களில் நிலவி வரும் சமூக சாதிய ஏற்றத்தாழ்வுகள் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து செப்டம்பர் 2017ல் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணமும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநில அரசும் முன்வரவேண்டும் மேலும், இனியும் இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மாணவர்கள் மனநலனை பாதுகாக்க பல்வேறு மாநிலங்களிலும் மனநல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கல்வி நிறுவனங்களில் பல்வேறு திறன் வளர்ப்பு திட்டங்களும், கவுன்சிலிங்கிற்கான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளாதகவும் அவர் குறிப்பிட்டார். மாணவர்களின் மனநலன் மேலும், இதற்கு மாநில அரசுகளும் போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு தனது பட்ஜெட்டில் ஆண்டுக்கு 0.06% தொகையை, மாணவர்களின் மனநலனை பாதுகாக்கும் திட்டங்களில் செயல்படுத்துவதாகவும் வருங்காலங்களில் மாணவர்களின் மரணங்கள் குறையும் என்றும் அவர் தனது பதிலில் குறிப்பிட்டார்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval