இந்நிலையில், மண் பாண்டத்தில் உருவாக்கப்பட்ட குக்கர், உலோக குக்கரை போலவே இருபுறமும் உலோக கைப்பிடி, மேல் மூடியின் நடுப்பகுதியில் இருந்து குக்கரின் கீழ் பகுதியின் இருபுறமும் இணைக்கப்பட்ட சில்வர் வளையம், மூடியை கீழ் பகுதியோடு இறுக்க, மேல் மூடியின் நடுவில் ஸ்க்ரூ, சமையலின் போது உள்ளே வைக்கப்பட்ட உணவுப்பொருள் வெந்து விட்டதை அறிவிக்க, பால் குக்கரில் உள்ளது போல் விசில் என கனகச்சிதமாக, பாதுகாப்பு அம்சமாக மண்பாண்ட குக்கர் உருவாக்கப்பட்டுள்ளது.கோவை பூ மார்க்கெட் பகுதியிலுள்ள மண் பாண்ட விற்பனை கடைகளில் ஒரு லிட்டர் அளவு மண் பாண்ட குக்கர் ₹2,500க்கு விற்கப்படுகிறது. இவற்றை பலர் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக உருவெடுக்கும் எந்தவொரு தொழிலும் அழியாது என்பதற்கு அடையாளமாக தற்போதைய மண் பாண்ட தொழிலும் மாறியுள்ளது.இதுகுறித்து மண்பாண்ட விற்பனையாளர்கள் கூறியதாவது:
பெரும்பாலான கிராமங்களில் குடிசை தொழிலாக இருந்து வந்த மண்பாண்ட தொழில் கடந்த சில ஆண்டுகளாக நலிவடைந்து விட்டது. மண் பானை உற்பத்திக்கு தேவையான மண் இலவசமாக எங்கும் எடுக்க முடிவதில்லை. சில இடங்களில், இதற்கு தேவையான மண் இருந்தாலும், அதற்கு விலை அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் மண் பாண்ட தொழிலை பாரம்பரியமாக செய்து வந்தவர்கள் விட்டுவிட்டனர்.ஆனால், பெரிய அளவில் பாண்டிச்சேரியில் நவீன முறையில் மண் பாண்ட நவீன பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து மாநிலம் முழுவதும் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை குக்கர் விலையைவிட அதிகமாக இருப்பதாக நுகர்வோர் கருதுகின்றனர். ஆனால், இதில் சமைப்பதால் கிடைக்கும் சுவை அதிகம். அதனால், பலர் வாங்கிச்செல்கின்றனர். இவ்வாறு மண்பாண்ட விற்பனையாளர்கள் கூறினர்.
courtesy;Dinakaran
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval