மும்பையில் உள்ள மகாலட்சுமி ரயில்நிலையத்தில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயனம் செய்து, டிக்கெட் பரிசோதகரிடம் ‘முதலில் மல்லையாவை பிடியுங்கள், நான் அபராதம் கட்டுகிறேன்’ என்று கூறிய பெண், நீதிமன்றத்தில் அபராதம் கட்ட மறுத்து சிறைக்கு சென்றார்.
#
இது குறித்து ரயில்வே காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ரயில்வே காவலர்கள் பிரேமலதாவிடம் அபராதம் செலுத்திவிட்டு செல்லுமாறும், இல்லாவிட்டால் சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் சொன்னதையே திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். இதையடுத்து ரயில்வே காவலர்கள் பிரேமலதாவின் கணவரிடம் போனில் தொடர்பு கொண்டனர்.
#
ஆனால், இந்த விதத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று கணவரிடம் கண்டிப்பாகக் கூறினார். ரூ.260 அபராதம் செலுத்தாமல் சுமார் 12 மணி நேரம் போராடினார் பிரேமலதா.
#
அதனால் வேறு வழியின்றி அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். நீதிபதியிடமும் அபராதம் கட்ட மறுத்த அந்த பெண், சிறைக்கு செல்வ தயாரக இருப்பதாக கூறி, ஒரு வாரம் தண்டனை பெற்று சிறைக்கு சென்றுவிட்டார்.
#
உங்களை போன்ற வீர பெண்மணிகளை பெற்ற இந்த நாடு உண்மையிலேயே பெருமை கொள்கிறது யாருக்கு வரும் இந்த துணிவும் விடாமுயற்சியும் இந்த நாட்டை ஆளும் காவிகள் இந்த வீர பெண்மணியை பார்த்து கொஞ்சமாவது நீங்க பாதுகாப்பாக அனுப்பி வைத்த மல்லய்யாவை பிடிக்க முயற்சி செய்யுங்கள்
#
9000 கோடி திருடியவன் ஜாலியாக இங்கிலாந்தில் 260 ரூபாய்க்கு ஒருவாரம் சிறை வாழ்க இந்திய நீதி
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval