Friday, March 23, 2018

​காரில் வந்து ஆடுகள் திருடும் கும்பல் - சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த பொதுமக்கள்!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி, அமரகுந்தி, முத்தம்பட்டி ஆகிய பகுதிகளிலும், இந்த கிராமங்களைசுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து ஆடுகள் திருட்டு நடந்து வந்தது


வயல்வெளிகளில் ஆடுகள் மேய்க்கும்போது காரில் வரும் திருட்டு கும்பல் காரை நிறுத்தி ஆடுகளை காரில் ஏற்றி சென்று விடுகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முத்தம்பட்டி கிராமத்திற்குள் புகுந்த ஆடு திருட்டு கும்பல் அங்குள்ள வீட்டின் முன்பாக கட்டி வைத்திருந்த 4 ஆடுகளை திருடி கார்களில் ஏற்றியுள்ளது. 

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சத்தம்போட்டு கத்தியுள்ளனர். அப்போது ஆடு திருட்டு கும்பல் கத்தியை காட்டி சத்தம்போட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதுடன் காரில் தப்பி சென்றுள்ளனர். 

இந்தநிலையில் ஆடுகள் பலமாக கத்தியதை கேட்ட கிராம மக்கள் எழுந்து வந்து ஆடு திருட்டு கும்பலை பிடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது திருடர்கள் இரண்டு கார்களில் தப்பி சென்றுள்ளனர். 

கிராம இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கார்களை விரட்டிச் சென்றபோது பழுதாகி நின்ற ஒரு காரையும், காரில் ஒரு திருடனையும் பிடித்து தொளசம்பட்டி காவல் நிலையத்தில் அந்த இளைஞர்கள் ஒப்படைத்தனர். 

இதனிடையே தொளசம்பட்டி உட்பட 5 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திருட்டுபோன 150-க்கும் மேற்பட்ட ஆடுகளை மீட்டுத் தரவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் ஆடு திருட்டு கும்பலை சேர்ந்த மேலும், ஒருவனை போலீசார் கைது செய்தனர். அவர்களுடன் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் ஏற்காட்டில் உள்ள கும்புதூக்கி பகுதியை சேர்ந்த ஹரிஹர சுதன், மணி ஆகியோர் என்பதும் அவர்களுடன் வந்தவர்கள் சீனி, குமார், ராமராஜ், முனியன், சின்னராஜன் என்பதும் தெரிய வந்தது. இதில், ஹரிஹர சுதன், மணிImage ஆகியோரை கைது செய்த போலீசார் மேலும், 5 பேரை தேடி வருகின்றனர்.


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval