ஆம்பூர் கலவரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்பூரில் கலவரம் நடந்த பகுதிகளை பல்வேறு கட்சியினர் பார்வையிட வந்தனர். ஆனால் அவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது வருகிற 15–ந்தேதி (புதன்கிழமை) வரை 10 நாட்கள் அமலில் இருக்கும் என திருப்பத்தூர் உதவி கலெக்டர் ரங்கராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவை நடத்தக்கூடாது. 4 பேருக்கு மேல் கூட்டமாக நிற்கக் கூடாது.
இந்த உத்தரவை தொடர்ந்து ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் போலீசார் ரோந்து வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval