Saturday, July 18, 2015

காமன்வெல்த் செஸ் போட்டியில் பட்டுக்கோட்டை மாணவர் சாதனை

காமன்வெல்த் செஸ் போட்டியில்
வெள்ளிப்பதக்கம் வென்று
பட்டுக்கோட்டை மாணவர் சாதனை
, : டெல்லியில் 11
நாடுகள் கலந்து கொண்ட
காமன்வெல்த் செஸ் போட்டியில்
இந்தியா சார்பில் பங்கேற்ற
பட்டுக்கோட்டை பள்ளி மாணவர் 16
வயதுக்குட்டோர் பிரிவில்
வெள்ளிப்பதக்கம் வென்றார்.டெல்லி
யில் இந்தியா, பாகிஸ்தான்,
தென்ஆப்ரிக்கா, இலங்கை,
மலேசியா, பிரிட்டன்,
வங்காளாதேசம், மாலத்தீவு,
ஆஸ்திரேலியா, நியூஸ்லாண்ட்,
ஜாம்பியா ஆகிய 11 நாடுகள்
பங்கேற்ற காமன்வெல்த் போட்டிகள்
நடைபெற்றது. இதில் செஸ்
போட்டியில் 16 வயதிற்குட்பட்டவ
ர்களுக்கான பிரிவில் 11
நாடுகளிலிருந்து 29 பேர் கலந்து
கொண்டனர். இதில்
இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை
சேர்ந்த 3 பேர் கலந்து கொண்டனர்.
அதில் மதுரை பிரதீஸ், சென்னை
இளஞ்சேரலாதன், தஞ்சை மாவட்டம்
பட்டுக்கோட்டையை சேர்ந்த
பரத்கல்யாண் ஆகியோர் அடங்குவர்.
இதில் பரத்கல்யாண் 8 முறை
போட்டியிட்டு அதில் 5 முறை
வெற்றியும், 2 முறை நேர்
செய்தும், ஒரு முறை
தோல்வியும் அடைந்தார்.
போட்டியின் இறுதியில் மாணவர்
பரத்கல்யாண் இரண்டாமிடம் பெற்று
மெடல், சான்றிதழ், ரூ 6 ஆயிரம்
ரொக்கப்பரிசு, வெள்ளிப்பதக்கம்
வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய
நாட்டிற்கும், குறிப்பாக
தமிழ்நாட்டிற்கும் பெருமை
சேர்த்துள்ளார். இவர்
பட்டுக்கோட்டை மௌண்ட் கார்மெல்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்
11ம் வகுப்பு படித்து வருகிறார்.
தந்தை பெயர் மாறன்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள
கட்டையங்காடு ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளி
தலைமையாசிரியராவார். தாய்
சுமித்ரா. இவரது தம்பி
ராஜேஷ்சர்மா. கட்டையங்காடு
ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு
படித்து படித்து வருகிறார்.
பொன்னவராயன்கோட்டை உக்கடை
பகுதியில் உள்ள புதிய
வீட்டுவசதிவாரிய குடியிருப்பு
பகுதியில் வசித்து வருகின்றனர்.
வெள்ளிப்பதக்கம் வென்ற
பரத்கல்யாணுக்கு பள்ளி சார்பில்
பாராட்டு விழா பள்ளி வளாகத்தில்
நடந்தது. தாளாளர் மற்றும் முதல்வர்
சுவாமிதாஸ்செல்லையா
சால்வை அணிவித்து ரூ ஆயிரம்
வழங்கி பாராட்டினார்.
பின்னர் பரத்கல்யாண் நிருபர்களிடம்
கூறுகையில், 9 வயதில் ெசஸ்
கற்றுக்கொண்டேன். என் தந்தைதான்
எனக்கு செஸ் விளையாட
கற்றுந்தந்தார். அதன் பிறகு
அன்சர்பாட்சா சார் எனது முதல்
குரு. முதன் முதலில்
தஞ்சாவூரில் நடந்த மாவட்ட
சதுரங்கப் போட்டியில் 9
வயதிற்குட்பட்டவர்களுக்கான
பிரிவில் முதலிடம் பெற்றேன்.
மாநில அளவில் காரைக்குடியில் 9
வயதிற்குட்பட்ட பிரிவில் கலந்து
கொண்டு முதலிடம் பெற்றேன்.
2012ல் கரூரில் நடந்த மாநில
போட்டியில் 13 வயதிற்குட்பட்டவர்கள்
பிரிவில் இரண்டாமிடம் பெற்று
தேசிய போட்டிக்கு தகுதி
பெற்றேன். 2013ம் ஆண்டு
புதுச்சேரியில் நடந்த தேசிய
போட்டியில் 13 வயதிற்குட்பட்டவ
ர்களுக்கானவர்கள் பிரிவில் 6வது
இடம் பெற்று ஆசிய போட்டிக்கு
தகுதி பெற்றேன். 2014ம் ஆண்டு
டெல்லியில் நடந்த ஆசிய
போட்டியில் இந்தியா சார்பாக
பங்கேற்றேன். 2015ம் ஆண்டு நடந்த
தேசிய போட்டியில் முதலிடம்
பெற்றேன். தற்போது டெல்லியில்
நடந்த காமன்வெல்த் சதுரங்கப்
பேட்டியில் 16 வயதிற்குட்பட்டவ
ர்களுக்கானவர்கள் பிரிவில்
இரண்டாமிடம் பெற்று
வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளேன்.
இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக
இருக்கிறது. நான் ஒரே ஒரு
கோரிக்கை மட்டும் நமது அரசுக்கு
முன்வைக்க விரும்புகிறேன்.
என்னை போன்றவர்களை அரசு
ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு
ஊக்குவித்தால் இன்னும் பல
சாதனைகள் படைக்க
உறுதுணையாக இருக்கும் என்றார்.

தமிழக அரசு இது போன்ற மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval