Thursday, July 30, 2015

அணுசக்தி, விண்வெளி சாதனையில் அப்துல் கலாமால் இந்தியாவுக்கு தனி இடம் கிடைத்தது:


மனித ஆற்றலின் ஞானி நமது பாதுகாப்பு திட்டங்களின் கதாநாயகன் என்ற அடிப்படையில் அவர், அளவுகளை மாற்றினார். மனித ஆற்றலின் ஞானி என்ற முறையில் அவர், குறுகிய ஒருதலைசார்பு உணர்வுகளில் இருந்து உயர்ந்த நல்லிணக்க பாதைக்கு செல்லும் வகையில் கொள்கையை தளர்த்தவே அவர் விரும்பினார்.


தோல்வியை தழுவாதவர் ஒவ்வொரு மகத்தான வாழ்க்கையும் ஒரு பெட்டகம் போன்றது. நம்மை நோக்கி வரும் அதன் கதிர்களில் நாம் குளிக்கிறோம். அவர் வாழ்ந்து காட்டிய முறைகள் எல்லாம், உண்மை தன்மையின் அடிப்படையிலேயே இருந்தது. புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும், சமுதாயத்துக்கு உகந்த குழந்தைதான். ஏழ்மை எப்போதுமே மாயையை ஊக்குவிப்பது இல்லை. ஏழ்மை என்பது ஒரு கொடூரமான 
பரம்பரை சொத்து ஆகும். ஒரு குழந்தை அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி கனவு காணும் முன்பே அது தோல்வியை தழுவிவிடலாம். ஆனால் அப்துல்கலாம் எத்தகைய சூழ்நிலையிலும் தோல்வி அடைந்ததில்லை.

இன்று பத்திரிகைகளில் கலாம் அவர் சிறுவனாக இருந்த காலத்திலேயே ஒரு பத்திரிகை போடும் விற்பனையாளராக பணம் சம்பாதித்து, அதன்மூலம் தன் படிப்புக்கு உதவ வேண்டிய நிலையில் இருந்தார். ஆனால் இன்றைய தினம் அதே பத்திரிகைகளில் பக்கத்துக்கு பக்கம் அவரது மறைவு செய்திகள் நிரம்பி உள்ளன.
Dr.Abdul Kalam with his hostel mates @ St.Joseph's College Trichy

வாழ்க்கை முறை.. அவர் எப்போதும், தனது வாழ்க்கை யாருக்கும் முன்மாதிரியாக இருக்கும் என்று ஆணவத்தோடு சொன்னதில்லை. ஆனால், வறுமையில் வாடும் ஏதாவது ஒரு குழந்தை தனது வாழ்க்கை உருவாக்கப்படுவதில் சில ஆற்றலை பெற்றால், அதுதான் அத்தகைய குழந்தைகளை பின்தங்கிய நிலையில் இருந்தும், ஆதரவற்ற நிலையில் இருந்தும் விடுதலை பெற உதவும். அப்படி ஒரு குழந்தை தான் எனக்கும்,அதுபோன்றே குழந்தைகளுக்கும் வழிகாட்டி என்றார்.

ஆணவமற்ற மனிதர்.. அப்துல்கலாமின் குணநலன் கள், உறுதிப்பாடு, ஊக்கமளிக்கும் கண்ணோட்டம் அவரது வாழ்க்கை முழுவதும் ஒளிவிட்டது. அவருக்கு எப்போதுமே, நான் என்ற ஆணவம் கிடையாது. பிறர் புகழ்ச்சிக்கும் அவர் மயங்கியது கிடையாது. நற்பண்பு மிக்க மரியாதை உள்ள கூட்டம் என்றாலும் சரி, உலகை சுற்றும் அமைச்சர்கள் கூட்டம் என்றாலும் சரி, இளைஞர்கள்-மாணவர்கள் உள்ள வகுப்பு அறைகள் என்றாலும் சரி எல்லாமே அவருக்கு ஒன்றுதான். அவரிடம் காணப்பட்ட பெரிய பண்பு என்னவென்றால், குழந்தையின் நேர்மையும், இளைஞரின் வேகமும், பெரியவர்களின் பக்குவமும் கலந்த கலவையாக அவர் இருந்தது தான். இந்த உலகத்தில் இருந்து அவர் பெற்றது குறைவு தான். ஆனால், இந்த சமுதாயத்திற்கு அவர் கொடுத்தது ஏராளம், ஏராளம் 

ஏழ்மை ஒழிப்பே ஆசை நமது சமுதாயத்தின் 3 முக்கிய குணநலன்களான சுய கட்டுப்பாடு, தியாகம் மற்றும் உருக்கம் ஆகியவற்றின் மொத்த உருவமாக திகழ்ந்தார். அந்த மாமனிதர், முயற்சியின் பிளம்புகளால் ஊக்கப்படுத்தப்பட்டார். நாட்டை பற்றிய அவரது கண்ணோட்டம் எல்லாம் சுதந்திரம், மேம்பாடு மற்றும் வலிமை என்பதின் அடிப்படையிலேயே இருந்தது. நமது சரித்திரத்தை பார்த்து சுதந்திரம் அமையவேண்டும் என்ற அடிப்படையில் இருந்தது. ஆனால் அதுவே மனதில் சுதந்திரமாகவும், அறிவாற்றலின் விரிவாக்கமாகவும் இருந்தது. அவர் இந்தியாவை வளர்ச்சியடையாத நிலைமை எனும் பள்ளத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என விரும்பினார். முழுமையான பொருளாதார வளர்ச்சி மூலம் ஏழ்மை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலேயே அவரது ஆசை அடங்கியிருந்தது.

அவர் சொன்ன ஆலோசனை அரசியல்வாதிகள் தங்கள் நேரத்தில் 30 சதவீதத்தை அரசியல் பணிக்கும், 70 சதவீதத்தை மேம்பாடு மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கும் செலவழிக்க வேண்டும் என்று ஞானமிக்க ஆலோசனையை கூறினார். இதை நாடாளுமன்ற உறுப்பினர்களும் பின்பற்றி தங்கள் பகுதியில் உள்ள பொருளாதார விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று விரும்பினார். 3-வது தூணாக வலிமை பற்றி அவர் யோசித்தார். அந்த வலிமை என்பது சண்டை மூலமாக அல்ல, எண்ணங்கள் மூலமாக இருக்கவேண்டும் என்று அவர் விரும்பினார்.

அவரால் தனி இடம் கிடைத்தது பாதுகாப்பற்ற ஒரு நாடு வளமைக்கான வழியை தேடுவது கிடையாது. வலிமை மரியாதையை தருகிறது. அணுசக்தி மற்றும் விண்வெளி சாதனையில் அவரது பங்களிப்பு உலகத்திலேயே இந்தியாவுக்கு என்று ஒரு தனி இடத்தை கொடுத்தது. அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் வளர்க்கும் புதிய கல்வி நிறுவனங்களை உருவாக்கி, இயற்கையின் வற்றாத சக்தியை பயன்படுத்தும் வகையில் நாம் செய்யும் முயற்சி தான், அவரது நினைவினை போற்றுவதாக அமையும்.

ஒவ்வொரு மரத்திலும் ஒரு கவிதை பல நேரங்களில் பேராசை நமது சுற்றுச்சூழலையே அழித்துவிடுகிறது. அப்துல்கலாம் ஒவ்வொரு மரத்திலும் ஒரு கவிதையை பார்த்தார். நீர், காற்று, சூரியன் மூலம் என்னென்ன சக்திகளை பெறமுடியும்? என்று பார்த்தார். அதே வகையான குறிக்கோள் உணர்வோடு நாம் இந்த உலகத்தை நமது கண்களால் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

விரும்பிய வாழ்க்கை... மனிதகுலம் தனது உறுதிப்பாடு, ஆற்றல் மிக்க விருப்பம், திறமை மற்றும் துணிவு ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள முடியும். நாம் எங்கு, எவ்வாறு பிறக்கவேண்டும்? எப்போது மரணம் அடையவேண்டும் என்பன போன்ற முடிவுகளை எடுக்கும் உரிமை நமக்கு இல்லை. ஆனால் அப்துல்கலாம் தான் எப்படி விடைபெற்றுக்கொள்ள வேண்டும்? என்பதை அவர் விரும்பியவாறே, அவர் மிகவும் நேசித்த மாணவர்கள் முன்னர் வகுப்பறையில் நின்றே முடித்துக்கொண்டு விட்டார்.

எத்தனையோ குழந்தைகள்.. ஒரு பிரம்மச்சாரி என்கிற வகையில் அவருக்கு குழந்தைகள் இல்லை என்று நாம் நினைக்கலாம். ஆனால் அது தவறு. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கற்பித்தல் மூலம், ஊக்கப்படுத்துவதன் மூலம், வலியுறுத்துவதன் மூலம், இருளில் இருந்து வெளியே கொண்டு வருவதன் மூலம் அவர் தந்தையாக திகழ்கிறார். அவர் எதிர்காலத்தை பார்த்தார். அதை அடைவதற்கான வழியை காட்டினார். நான் அவர் உடல் கிடத்தப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தேன். அப்போது வாசலிலேயே அவர் குழந்தைகளுக்காக எழுதிய புத்தகத்தில் உள்ள சில வரிகள் எழுதப்பட்டிருந்ததை பார்த்தேன். அந்த வரிகள் எனது மனதை தூண்டின. அவருடைய நற்செயல்கள் எல்லாம், அவரது உடலோடு புதைக்கப்பட போவதில்லை. இந்த நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் தங்கள் வாழ்வின் மூலமாக, தங்கள் பணிகளின் மூலமாக அவரது நினைவை போற்றுவதாக அமையும். அதனையே அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் பரிசாக கொடுத்து விட்டு செல்வார்கள். இவ்வாறு பிரதமர் மோடி எழுதியுள்ளார்.

1 comment:

  1. காலம் பதில் சொல்லும் என்பார்கள் ஆனால் கலாம் தான் பதில் சொன்னார் விடை இல்லா விஞ்ஞான கேள்விகளுக்கு.

    ReplyDelete

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval