Thursday, July 9, 2015

மரணத்தின் மடியில் ...

நாங்கள் உலக இஸ்லாமியர்கள்ப்னு ரபாஹ் (ரலி) அவர்கள் மரணவேளையில் ...
அவர்களின் மனைவி அழுந்துகொண்டிருக்கிறார்கள்
ஆனால் பிலால் (ரலி) சிரிக்கிறார்கள் ஏன்தெரியுமா ?
பிலால் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
“நாளை நான் என் ஹபீப் (என்னுடைய நேசர்) முகமத் (ஸல்) அவர்களை சந்திக்கபோகிறேன் நபி தோழர்களை சந்திக்க போகிறேன் “என்று கூறி சிரித்தார்கள்
‪#‎அபூதர்‬ அல் கிபாரி (ரலி)மரணவேளையில்..
ஒரு மிகபெரிய சகாபி . இந்த மக்களெல்லாம்
உலக விரும்பிகள் என்று மக்களுடன் வாழ பிடிக்காமல் நடுகாட்டில் சென்று வாழ்தவர் அல்லவா ? ஒரு உணவிற்கு கூட்டாக இன்னொரு உணவு பார்க்காத ஒரு சகாபி .
நடுக்காட்டில் இருக்கும்போது வருகிறது சக்கராத் - மரண வேளை .
அவர்களுடைய மனைவி அழுகிறார்கள் .அப்போது அபூதர் அல் கிபாரி (ரலி) அவர்கள் “ஏன் அழுகிறாய்” என்று கேட்கிறார்கள் அதற்க்கு அவர்களின் மனைவி “நீங்கள் இந்த காட்டில் மரணித்தால் உங்களுக்கு கபனிட ஒரு துணிகூட இல்லையே என்று அழுகிறேன் “ என்றார்கள்
அதற்க்கு அபூதர் அல் கிபாரி (ரலி) அவர்கள் “மதீனாவில் நான் நபி (ஸல்) அவர்கள் உடன் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள்
கூற கேட்டேன்
“உங்களில் ஒருவருக்கு நடுகாட்டில் மரணம் வரும் அவருக்காக முஹ்மீங்களின் ஒருகூட்டம் (அடக்கம் செய்ய) வரும் “என்றார்கள்
அந்த அவையில் இருந்த எல்லோரும் மதீனாவில் உள்ளனர் நான் மட்டும் தான் நடுகாட்டில் இறக்கபோகிறேன் ஆக நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த நபர் நான்தான் எனவே நீ பாதையில் யார் வருகிறார்கள் என்பதை பாரும் “ என்று தன் மனைவியிடம் கூறுகிறார்கள்
அதுபோல் ஒரு கூட்டம் வருகிறது இப்னு மஸ்வூத் (ரலி) போன்ற பெரிய சஹாபாக்கள் அந்த குழுவில் இருந்தனர் .
அப்போது அபூதர் அல் கிபாரி (ரலி) அவர்களை அடையாளம் கண்டுகொண்டனர் .அபூதர் அல் கிபாரி (ரலி) அவர்கள் அந்த குழுவை பார்த்து
“உங்களின் யார் செல்வந்தர் , யார் ஆட்சி அதிகாரம் உடையவர் அவர்கள் எல்லாம் தயவு செய்து என்னை தொடவேண்டாம் யார் அணிவதற்கு மேலாடையும்
கீழாடையும் மட்டும் வைத்துள்ளீர்களோ அவர்கள் மட்டும் எனக்கு கபன் இடுங்கள் “என்று கூற வந்திருந்த அனைவரும் தலைகுனித்தனர் .
ஒரு அன்சாரி இளைஞர் மட்டும் “நான் அணிதிருக்கும் இந்த ஆடையும் என் வீட்டில் இருக்கும் ஒரு ஆடையும் தவிர என்னிடத்தில்
ஒன்றும் இல்லை “என்றார் .
அவர்கள் இறந்தபின்.
அந்த அன்சாரி சிறுவனால் கபனிடபட்டு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தொழுகை நடத்தி அடக்கம் செய்தார்கள் .

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval