விவசாயிகளுக்கும், வேளாண் வணிகர்களுக்கும் பயன்பெறும் வகையில் செல்பேசி அடிப்படையிலான சேவைகள் (mkisan), மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.
மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், விவசாய அறிவியல் மையங்கள் மற்றும் வேளாண்-வானிலை ஆய்வுக்களங்கள் தொடங்கி, விவசாயிகள் வரை மத்திய, மாநில அரசுசார் நிறுவனங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களால் இச்சேவை வழங்கப்படுகிறது.
விவசாயம் மற்றும் இதர துறைகளின் எல்லா விதமான மொபைல் சார்ந்த செயல்பாடுகளுக்கும், எம்கிஸான் ஆதாரமாக அமையும்.
மேலும், எம்கிஸான் பெறப்படும் மற்றும் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள், கலந்துரையாடும் வசதி கொண்ட குரல்வழி வழிகாட்டும் அமைப்பு (IVRS), கட்டமைப்பற்ற துணை சேவை டேட்டா (USSD), மற்ற மொபைல் செயலிகள் மற்றும் சேவைகளை ஒருங்கே தருகிறது.
வேளாண்மைத்துறை அமைச்சகத்தின் விவசாயிகளுக்கான இணையதளமாக இது செயல்படும் இணைய முகவரி: www.mkisan.gov.in
கிராமப்புறங்களில் இணையப் பயன்பாடு (ஒற்றை இலக்க சதவீதம்) மிகவும் குறைவாக இருப்பதால் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval