Saturday, July 11, 2015

கடற்கரைக்கு நாம போகவேண்டாம்.. சீக்கிரம் கடலே இங்க வரும்…எச்சரிக்கும் ஆய்வு

Picture 065அதிக வெப்பம் காரணமாக அதனை தணித்துக் கொள்ள பொதுமக்கள் தான் கடற்கரைக்குச் செல்கின்றனர். இதே வெப்ப நிலை நீடித்தால், விரைவில் கடலே உங்களைத் தேடி வரும் என்று அச்சுறுத்துகின்றனர் அமெரிக்க சுற்றுச்சூழல் நிபுணர்கள்.
வெப்பம் காரணமாக பசிபிக் உள்ளிட்ட பகுதிகளில் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவதால் உலக அளவில் கடற்பரப்பின் உயரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதே நிலை நீடித்தால், இன்றும் சில ஆண்டுகளில் கடற்பரப்பு 6 மீட்டர் அல்லது 20 அடி அளவுக்கு உயரக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பூமியின் வெப்பமயமாதல் காரணமாக துருவங்களின் வெப்பமயமாதலும் அதிகரிக்கிறது. தற்போது கிரீன்லாந்து மற்றும் அன்டார்டிகா பகுதிகளில் பனிக்கட்டிகளின் அளவு குறைந்து கொண்டே வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval