Monday, July 20, 2015

பெட்ரோல் பங்குகளில் நாள்தோறும் நடக்கும் பகல் கொள்ளை தெரியுமா உங்களுக்கு?

இப்படியுமா ஏமாற்றுவார்கள் என்று என்னை
ஆச்சரியம் அடைய வைத்த ஒரு விஷயத்தை
பகிர்ந்து கொள்கிறேன்-
இனிமேல் யாரும்
இவ்வாறு ஏமாறக் கூடாது என்பதற்காக.
வழக்கமாக இரு சக்கர வாகன ஓட்டிகள்தான்
இவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்.
அதாவது, நீங்கள் கவனித்தது உண்டா - பெட்ரோல்
முழுமையாக உங்கள் டேங்கில் நிரம்பும்
முன்னதாகவே கையில் உள்ள லாக்கை அழுத்தி
விடுவார்கள்.
உதாரணமாக நீங்கள் 100 ரூபாய்க்கு
பெட்ரோல் போட சொல்லி இருப்பீர்கள். அந்த நபர்
100 ரூபாய் என பொத்தானை அழுத்தி பெட்ரோல்
போட ஆரம்பிப்பார். ஆனால் பெட்ரோல் இறங்கி
கொண்டிருக்கும்போதே மீட்டரில் 90 ரூபாய்க்கு
அருகில் வரும்போது அவர் கையில் உள்ள
விசையை அழுத்தி பின் ரிலீஸ் செய்வார்.
பின்னர் பெட்ரோல் மெதுவாக இறங்கி 100
ரூபாயை தொடும்.
இது வழக்கமாக எல்லோரும் பார்க்கும் ஒரு
விஷயம்தான். ஆனால் இந்த சாதாரண
விஷயத்தினால் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை
மதிப்புள்ள பெட்ரோல் உங்களுக்கு குறைகிறது
என்று தெரியுமா?
எவ்வாறெனில், பெட்ரோல் பம்ப் மீட்டர் ஒரே சீராக
இயங்கினால்தான் சரியாக 100 ரூபாய்க்கு
பெட்ரோல் இறங்கும். நடுவில் தடை செய்யப்பட்டு
பின்னர் மீண்டும் இயங்கினால், மீட்டர் recalibration
ஆகி குறைவான அளவு பெட்ரோல் மட்டுமே
உங்களுக்கு கிடைக்கும்.
இது போல நூதன திருட்டு மூலம் பெட்ரோல் பங்க்
உரிமையாளர்கள் நாள்தோறும் 10000 ரூபாய்
முதல் 20000 ரூபாய் வரை லாபம் அடைவதாக
அறிந்தேன்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த விஷயத்தை
பற்றி என் நண்பர் எனக்கு கூறும் வரை எனக்கும்
இது தெரியாது. ஆனால் இப்போது நான் இதில்
கவனமாக இருக்கிறேன். பெட்ரோல் போடும் நபர்
விசையை அழுத்த இப்போது அனுமதிப்பதில்லை.
பெட்ரோல் முழுமையாக இறங்கும் முன் விசையை
அழுத்த முயற்சித்தால் கூடாது என
எச்சரிக்கிறேன். தற்போதெல்லாம் என்னை
பார்த்தாலே அவர்கள் உஷார் ஆகி விடுகிறார்கள்.
விசையின் மீது கையை வைப்பதே இல்லை.
விழிப்புடன் இருங்கள். ஏமாற்றப்படுவதை
தவிருங்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval