Tuesday, July 14, 2015

வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு.. டிக்ரீ செர்டிபிகட் அட்டஸ்டேஷன்....

முதலில் HRD பண்ண வேண்டும்...இது எவ்வாறு இலகுவாக செய்ய வேண்டும் என்று நான் ஏற்கனவே முக நூலில் தெரிவித்து இருந்தேன்..
HRD-முடித்த பிறகு வெளிநாட்டு அமைச்சக அட்டஸ்டேஷன் வாங்குவது...இதையும் நான் இன்று இலகுவாக முடித்தேன்..அல்ஹம்து லில்லாஹ்!
வெளிநாட்டு அமைச்சக அட்டஸ்டேஷன் வாங்குவதற்கு டெல்லி எல்லாம் செல்ல தேவை இல்லை....( டெல்லி தான் செல்ல வேண்டும் என்று ட்ராவல்ஸ் காரர்கள் பீலா விடுவார்கள்)
வெளிநாட்டு அமைச்சக துணை செக்ரடரியேட் சென்னையிலேயே அமைந்துள்ளது.. அமைந்துள்ள இடம்.
7-வது மாடி,
ஈ. வி.கே சம்பத் மாளிகை,
68, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம்,
சென்னை- தொலை பேசி: 044-28272200/28251323.
HRD அட்டஸ்டேஷன் செய்யப்பட்ட கான்வோகசன் செர்டிபிகட் அசல், அதன் ஒரு ஜெராக்ஸ் நகல், பாஸ்போர்ட் நகல் ..இவைகளை எடுத்து கொண்டு மேற்கண்ட அலுவலகம் செல்ல வேண்டும்.
ஒரு படிவத்தை தந்து நிரப்ப சொல்லுவார்கள்.... நிரப்பி கொடுக்க வேண்டும். எந்த வளைகுடா நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று அதில் குறிப்பிட வேண்டும்... மேற்கண்ட டாக்குமெண்டுகளை வாங்கி கொண்டு அக்னாலஜ்மென்ட் ஸ்லிப் தருவார்கள்..
"எந்த வித கட்டணமும் இல்லை ".... காலையில் 10 மணிக்கு கொடுத்தால் மாலை 4.30 முதல் 5.30 மணி வரை அந்த ஸ்லிப்பை காண்பித்து பெற்று கொள்ளலாம்..
HRD. EXTERNAL MINISTRY ATTESTATION--போன்ற காரியங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஏஜன்டுகளே 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கேட்ட நிலையில் ஒரு செர்டிபிகட்டிற்கு 1500 ரூபாய் செலவில் மட்டுமே முடிக்கப்பட்டது. இந்த மாதிரியான தகவல்களை முகம் தெரியாத ஒரு முக நூல் நண்பரே முக நூலில் பதிவு செய்து இருந்தார்...
ஆக! இறைவனுக்கும், இறைவன் படைத்த அந்த முக நூல் நண்பருக்கும், முக நூலிற்கும் மிக்க நன்றி..
எனக்கு இலகுவில் கிட்டிய பயன்பாடு அடுத்தவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என் ஆசை.
தகவல் ;நவாஸ் 
DUBAI

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval