Thursday, July 30, 2015

5 வருடங்களுக்கு பின் உலகின் மிகப் பெரிய பூவான "டைடன் ஆரம்" டோக்கியோவில் மலர்ந்துள்ளது


உலகின் மிகப் பெரிய பூவான "டைடன் ஆரம்" ,டோக்கியோவில் உள்ள ஜிண்டாய் தாவரவியல் பூங்காவில் 5 வருடங்களுக்கு பின்னர் ,மலர்ந்துள்ளது.ஜிண்டாய் தாவரவியல் பூங்கா திறந்திருக்கும் நேரங்களில் இந்த பூவை பார்க்க கூட்டம் அலை மோதுகிறது.2 மீட்டர் ( 6.5 அடி) உயரத்தில் மிக பிரமாண்டமாக காட்சியளிக்கிறது "டைடன் ஆரம்"., 40 வருடங்கள் வாழ்நாளைக் கொண்ட இத்தாவரம் நான்கு அல்லது ஐந்து முறை மட்டுமே பூக்குக்கிறது.அதுவும் இத்தாவரத்தில் பூக்கும் பூ 5 நாட்கள் மட்டுமே வாடாமல் இருக்கும்.அதனால் இப்பூவை பார்க்க ஜிண்டாய் தாவரவியல் பூங்காவில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.10 அடி உயரத்திற்கு வளரும் இத்தாவரம் கடந்த 2010 ஜூலை மாதம் 22ஆம் தேதி கடைசியாக பூத்துள்ளது. இந்தோனேசியாவின் சுமத்திரா தீவுகளே இத்தாவரத்தின் பிறப்பிடமாகும்
courtesy;Dinakatan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval