Thursday, May 26, 2016

மகாராஷ்ராவில் அணைகட்ட 10 ஏக்கர் நிலத்தை விற்று அந்த பணத்தை ஊருக்கு வழங்கிய விவசாயி


மும்பை: மகாராஷ்ராவில் அணைகட்டுவதற்காக விவசாயி ஒருவர் 10 ஏக்கர் நிலத்தை ஊருக்கு தானமாக வழங்கியுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு மகாராஷ்டிரா மாநிலமும் தப்பவில்லை. அம்மாநிலத்தின் அகோலா பகுதியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் தவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் அகோலா பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் நீர் தேக்கம் கட்டுவதற்காக தனது 10 ஏக்கர் நிலத்தை விற்று அந்த பணத்தை ஊருக்கு தானமாக வழங்கியுள்ளார். இதன் மூலம் மழை காலத்தில் தமது கிராமத்திற்கு தேவையான நீரை சேமிக்க முடியும் என்று அந்த விவசாயி தெரிவித்துள்ளார். 
courtesy;Dinakaran 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval