Tuesday, May 24, 2016

மனிதநேயம்_இன்னும்_சாகவில்லை‬


செப்.16: காலை 7.30 மணிக்கு புதுச்சேரி பஸ் நிலையத்திலிருந்து ( TN.45 N.3720 ) கரூர் டிப்போவை சேர்ந்த பஸ் கரூருக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ்ஸில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செயதனர்.
அரியாங்குப்பம் அருகே பஸ் சென்ற போது பயணி ஒருவருக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அந்த நேரத்தில் புத்திசாலி தனமாக யோசித்து ஓட்டுனர் கோபால்ராஜ் அதிவேகமாக பஸ்ஸை இயக்கி பிள்ளையார்க் குப்பத்தில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட அந்த பயணியை நடத்துனர் ஜயன்பெருமாள் உதவியுடன் அவர்களே கொண்டு போய் சேர்த்தனர்.
சேர்த்த பிறகு கரூர்க்கு பஸ் புறப்பட்டு சென்றது. நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட பயணியின் உயிரை காப்பாற்றிய தமிழக அரசு பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அவர்களின் மனித நேயத்தை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.
மீதி சில்லறை கொடுக்காத நடத்துனர்களையும், கேள்விக்கு பதில் அளிக்காத ஓட்டுனர்களையும் பார்த்து பலகி போன நமக்கு இவர்கள் இருவரும் ஆச்சர்ய மூட்டுபவர்கள் தான். மனித நேயம் சாகவில்லை என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval