Monday, May 23, 2016

திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கிய அபூர்வ வகை பாம்பு மீன்: வேடிக்கை பார்க்க மக்கள் திரண்டனர்


திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கிய அபூர்வ வகை பாம்பு மீனை பார்க்க மக்கள் குவிந்தனர்.
திருச்செந்தூர் கடற்கரையொட்டி அய்யா கோயில் உள்ளது. இதனருகே உடல் முழுவதும் புள்ளிகளுடன் பாம்பு வடிவம் கொண்ட  மீன் செத்து ஒதுங்கி கிடந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் கூடிவிட்டார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘’ ஆறு, குளங்களில் விலாங்கு மீன் உண்டு. அது பார்ப்பதற்கு பாம்புபோல் இருக்கும். ஆனால் கடலில் இதுபோன்ற பாம்பு மீன் இப்பகுதியில் கிடையாது. இந்த அபூர்வ மீன் எங்கிருந்து வந்தது என சரியாக தெரியவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட புயலால் இலங்கையில் கன மழை கொட்டியது. ஒருவேளை அங்குள்ள கடல் பகுதியில் இருந்து வந்திருக்கலாம்’ என்றனர்.courtesy;Dinakaran

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval