Monday, May 16, 2016

எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்? - 5 கருத்துக்கணிப்புகளின் முடிவுகள்

கோப்புப் படம். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு டைம்ஸ் நவ்- சி வோட்டர், இந்தியா டுடே, ஏபிபி, நியூஷ் நேஷன், நியூஸ் எக்ஸ் ஆகியவற்றின் கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்பதால் இவை கவனம் பெறுகின்றன.
தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் திங்கட்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தவிர 232 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.
தமிழகத்தில் அதிமுக, திமுக காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக- ம.ந.கூட்டணி - தமாகா அணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி என ஆறுமுனைப் போட்டி நிலவுகிறது.
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி சேனலும் சி வோட்டர் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் மாலை 7 மணிக்குப் பிறகு வெளியிடப்பட்டன.
அதிமுக பெரும்பான்மை: டைம்ஸ் நவ்- சி வோட்டர் கருத்துக்கணிப்பு
அதிமுக - 139, திமுக - 78, பிற கட்சிகள் - 17.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 139, திமுக கூட்டணிக்கு 78, மற்ற கட்சிகளுக்கு 17 இடங்கள் கிடைக்கும் என டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
திமுக பெரும்பான்மை: ஏபிபி கருத்துக்கணிப்பு
திமுக - 132, அதிமுக - 95, பாஜக - 1, பிற கட்சிகள்- 6.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 95, திமுக கூட்டணிக்கு 132, பாஜகவுக்கு 1, மற்ற கட்சிகளுக்கு 6 இடங்கள் கிடைக்கும் என ஏபிபி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பெரும்பான்மை: நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு
திமுக : 114 -118, அதிமுக: 95 - 99, பிற கட்சிகள் 27.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 95- 99 இடங்களும், திமுக கூட்டணிக்கு 114- 118 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 27 இடங்களும் கிடைக்கும் என நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பெரும்பான்மை: இந்தியா டுடே கருத்துக்கணிப்பு
திமுக: 124- 140, அதிமுக: 89 - 101, பிற கட்சிகள்: 4- 11
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 89- 101 இடங்களும், திமுக கூட்டணிக்கு 124- 140 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 4-11 இடங்களும் கிடைக்கும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பெரும்பான்மை: நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பு
திமுக : 129 -151, அதிமுக: 81 - 99, பிற கட்சிகள்: 2 - 6
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 81- 99 இடங்களும், திமுக கூட்டணிக்கு 129- 151 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 2- 6 இடங்களும் கிடைக்கும் என நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட 5 கருத்துக்கணிப்புகளில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை பெறும் என டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி, இந்தியா டுடே, நியூஷ் நேஷன், நியூஸ் எக்ஸ் ஆகிய நான்கு கருத்துக்கணிப்புகளிலும் திமுக பெரும்பான்மை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
courtesy;TheHindu Tamil

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval