Saturday, May 21, 2016

பூமி அருகே சுற்றித்திரியும் 230 அடி நீளமுள்ள மர்ம விண்கலம்


பூமி கிரகத்திற்கு அருகே சுழன்று கொண்டிருக்கும் சிறுகோள் ஒன்றை நோக்கி மிகவும் வெளிச்சமான மற்றும் நீளமான ஒரு அடையாளம் தெரியாத விண்கலம் ஒன்று பயணிக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வெள்ளை பொருளானது யூஎப்ஒ எனப்படும் வேற்றுகிரக வாசிகளின் விண்கலமா என்ற கோணத்திலும் அந்த வீடியோ ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. 

பதிவான கருப்பு மற்றும் வெள்ளை வீடியோவில் வரும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் சுமார் 230 அடி நீளம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கமளித்த நாசாவோ இந்த பொருள் பற்றி தனைகளுக்கு முன்னதாகவே தெரியும் என்றும், அது ஒரு வகையான ஒரு சிறிய நிலவு போன்ற விண்வெளி பொருள் என்றும் கூறியுள்ளது.

ஆனால், சில ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பகுப்பாய்வாளர்கள் நாசாவின் விளக்கத்தை ஏற்க மறுப்பு தெரிவித்ததோடு அந்த வீடியோவில் வருவது ஒரு யுஎஃப்ஒ என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். கிடைக்கப்பெற்ற வீடியோவை நன்கு ஆராய்ந்து பார்த்ததில் இருந்து அந்த மர்ம விண்கலம் ஆனது நீளமான மற்றும் அதே சமயம் சாத்தியமான முட்டை வடிவத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
courtesylDinakaran

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval