தொடுதிரை மொபைல்கள் வந்த கொஞ்ச நாட்களில் ஆளாளுக்கு, ஸ்க்ரீனில் விரல் வைத்து இழுத்துக் கொண்டே இருப்பார்கள். என்னடா என்று பார்த்தால், இந்த கேம்தான் பலரது மொபைலை ஆக்ரமித்திருந்தது. ஆம். ஆங்க்ரி பேர்ட்ஸ்! தொடுதிரை மொபைல்கள், ஃபேஸ்புக், வீடியோ கேம் என இந்த ஒரே கேம், பல தளங்களிலும் கோலோச்சியது. குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை மொபைல் வைத்திருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் ரசித்த கேம் இது. இந்த பாய்ச்சலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போயிருக்கும் ஹாலிவுட் தொழிற்சாலையின் கலர்ஃபுல் ப்ராடக்ட் தான் இந்த வாரம் வெள்ளித் திரைகளில் வெளியாகியிருக்கும் ஆங்க்ரி பேர்ட்ஸ்.
பறவைகள் தான். ஆனால் பறக்கமுடியாது, அவற்றுக்கென்று தனித்தீவு. ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு கலர், கலர்ஃபுல்லான அந்தத் தீவில் என்றுமே ஹாப்பி தான். இந்தத் தீவிற்கு வரும் பச்சை நிறப் பன்றிகள் ச்சீட்டிங் செய்து, பறவைகளின் முட்டையை அபேஸ் செய்துகொண்டு போக, கோபக்கார பறவை ரெட்டின் துணையோடு, எப்படி முட்டைகளை மீட்டனர் என்பதே ஆங்க்ரி பேர்ட்ஸ் படத்தின் கதை.
முதல் காட்சியில் இருந்தே காமெடி சரவெடியாக இருக்கிறது ஆங்க்ரி பேர்ட்ஸ். அத்தனைக்கும் கோபப்படும் ரெட்டின் அட்ராசிட்டி தாங்கமுடியாமல், அவன் ஊரில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறான். கோபமாக இருக்கும் ரெட்டை நல்வழிப்படுத்த கோபத்தைக் குறைக்கும் வகுப்பிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு ஏற்கனவே வேகமாக சென்று டிராபிக் போலீஸில் அடிக்கடி மாட்டும் “சக்”, கோபம் வந்தால் வெடிக்கும் “பாம்ப்” , உர்ர் என முறைக்கும் டெர்ரென்ஸ் ஆகியோர் வகுப்பில் இருக்க, அங்கேயும் காண்டாகிறது ரெட்.
இப்படியிருக்க, கப்பலில் உள்ளே நுழையும் பச்சை நிறப் பன்றிகள், உங்களுக்கு மிக்ஸி தருகிறோம் , டிவி தருகிறோம் என்பது போல வாக்குறுதிகளை அள்ளி வீச, முட்டாள் பறவைகள் குத்தாட்டம் போட ஆரம்பிக்கின்றன. “இதுகளயெல்லாம் பார்த்தா அவ்வளவு நல்லவிங்களா தெரியலயே?” என ஆங்க்ரி ரெட் மற்ற பறவைகளிடம் சொன்னாலும், “அடப்போடா போக்கத்தவனே” என ரெட் பேச்சைக் கேட்காமல் பன்றிகளோடு ஜாலியாய் பறவைகள் டான்ஸ் ஆடும் இடம் நிச்சயம் ஆங்க்ரி பேர்ட்ஸ் பிரியர்களைத் துள்ளிக்குதிக்கவைக்கும்.
பறவைகளைக் காப்பாற்ற ஒரே வழி என யோசித்து சீனியர் தாதா கழுகை கூட்டிவரச் செல்கிறது ரெட். ரெட்டோடு, பாம்பும், சக்கும் இணைந்து வர, ஏழு மலை, கடல் தாண்டி கழுகு மலைக்குச் செல்கின்றன. ஆங்கே இருக்கும் அறிவுக்கடலில் உல்லாசக் குளியல் போடுகின்றன பாம்பும் சக்கும். அது அறிவுக்கடல் அல்ல உச்சாக்கடல் எனத் தெரிய வர, திரையரங்கம் முழுவதும் சிரிப்பலைகள்.
சீனியர் தாதா கழுகோ, “நான் லெஜெண்டு ஆன போதே ரிட்டயர்டு ஆகிவிட்டேன். உங்களை நீங்களே காப்பாத்திக்கோங்க” என திருப்பி அனுப்பி விடுகிறது. அதற்குள் எல்லா முட்டைகளையும் அபேஸ் செய்துகொண்டு ஓடிவிடுகின்றன பச்சை நிறப் பன்றிகள். “நீ அந்தப் பன்றிகளைப் பற்றிச் சொல்லும்போது நாங்க கேட்கவே இல்லை, இனி எங்களுக்கு எல்லாமே நீ தான் ரெட்” என ரெட்டினை ஹீரோவாக்கி, அவரின் குரலுக்கு காத்திருக்கின்றன மற்ற பறவைகள்.
அதற்கு ரெட், “கோபப்படறவன் மட்டும் என் பக்கம் நில்லு, சாந்தமா இருக்கறவன்லாம் தள்ளி நில்லு” என வெற்றிவேல், வீரவேல் சகிதமாக எல்லாப் பறவைகளின் கோவத்தையும் கிளப்பிவிட்டு போருக்கு ரெடியாகிறது ரெட். போர்.. ஆமாம் போர்!
பச்சை நிறப் பன்றிகளின் ஏரியாவிற்கே சென்று சரவெடி சத்தத்துடன் ‘ஊடுகட்டும்’ இந்த ஆங்க்ரி பேர்ட் பறவைகள், ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு வித்தியாசமான பவர் என்று அந்த இடத்தையே துவம்சம் செய்யும் காட்சிகள், ரெட், பறவைகளின் முட்டைகளை மீட்டெடுக்கும் இடம் மற்றும் க்ளைமேக்ஸ் காட்சிகள் விஷுவலி ஆஸமப்பா.... ஆஸம்...

ரெட்டை பார்க்கும் போதெல்லாம், 'டேடி' எனக்கூப்பிடும் குட்டிப் பறவை, நானும் ரவுடி தான் உர்ர் பேர்வழி போல் உர்ரெனவே இருக்கும் டெர்ரென்ஸ், சில நிமிடங்களே வந்தாலும் கலக்கும் கழுகு, அதிகவேகத்தில் அசரடிக்கும் சக் என இது பறவைகளின் உச்சக்கட்ட திருவிழா. அனிமேஷன், மியூசிக் என்று ஒரிஜினாலிட்டியுடன் 3டியில் படம் பார்ப்பது பொழுதுபோக்கிற்கான நல்ல விருந்து.
வில்லன்களாகவரும் பச்சை நிறப் பன்றிகள், ரொம்ப மோசமானவர்கள் என்ற எண்ணத்தை மனதில் விதைக்காமலும், ஹீரோயிஸம், வன்முறை கலந்த சண்டைக்காட்சிகள் என்றில்லாமலும், எல்லா காட்சிகளையுமே குழந்தைகளின் பேவரைட்டாக மாற்றி, ரசிக்கவைக்கும் சிறந்த அனிமேஷன் மூவிகளில் இதுவும் ஒன்றாக இடம்பிடிக்கும்.
கறை நல்லது விளம்பரம் போல.. கோவம் நல்லது.... நல்ல விஷயத்திற்காக, நம்முடைய உரிமையை மீட்டெடுக்க கோவப்படலாம் ப்ரெண்ட்ஸ் என்பதை சூப்பராக சொல்லிவிட்டு செல்கின்றன இந்த கோவக்காரப் பறவைகள்
!courtesy;vikadan
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval