Thursday, May 5, 2016

பெருந்துறையில் அதிமுக தேர்தல் அறிக்கையை சற்று முன் வெளியிட்டார் முதல்வர் ஜெ.

jayalalitha.jpg
முதல் பிரதியை டாக்டர் மு. தம்பிதுரை எம்.பி. பெற்றுக் கொண்டார்.
விவசாயிகளுக்கு அனைத்து கடன்களும் தள்ளுபடி
2016-2021 காலத்தில் 40,000 கோடி ரூபாய் பயிர்கடன்
விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
அத்திக்கடவு – அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தமிழகத்தில் அனுமதிக்க முடியாது
பத்திரப் பதிவு எளிமையாக்கப்படும்.
மீனவர்கள் நிவாரணத் தொகை ரூ. 5,000 ஆக ஆக்கப்படும்.
மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்
மீனவர்கள் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை
உள்நாட்டின் மீன் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம்
மின்பதன பூங்காக்கள் அமைக்க தொடரந்து நடவடிக்கை எடுக்கப்படும்
புதிய சாலைகள் அமைக்கப்படும். சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும்.
மகப்பேறு உதவித்தொகை ரூ. 18,000
மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் இலவச இணைய இணைப்பு
பள்ளிக்கல்வி மேம்படுத்தப்படும்
100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணமில்லை
பொங்கல் திருநாளில் கோ-ஆப்டெக்ஸில் துணிமணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன்
வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு
தகவல் ;S.R.ரவி 


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval