தமிழகத்தில் நடந்து முடிந்த 232 தொகுதிக்கான சட்டமன்ற தேர்தலில், சீமானின் நாம் தமிழர் கட்சி முதன்முறையாக அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளரை நிறுத்தி தேர்தலை சந்தித்தது.
தேர்தல் முடிவில் 232 தொகுதிகளில் இரு திராவிட கட்சிகளை தவிர, வேறு எந்த கூட்டணியோ, கட்சியோ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை,
இந்நிலையில் முதன்முறையாக தேர்தலை சந்தித்த நாம் தமிழர் கட்சி மொத்தம் 1.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
தேர்தலின் முடிவு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, வெகுவான மக்களுக்கு இந்த இரண்டு ஆட்சியும் வரக்கூடாது என்கிற எண்ணம் இருக்கிறது.
ஆனால், மாற்று யாரு என தெரியவில்லை? மாற்றாக நினைப்பவர்கள் அனைவரும் ஒரு ஏமாற்றாக மாறி ஒரு தற்காலிக தோல்வியை கூட தாங்க முடியாமல் அன்றைய தேவைக்காக படக்கென இரண்டு திராவிட கட்சிகளிடம் சரணடைந்து விடுகின்றனர்.
இதனால், இந்த இரண்டு திராவிட கட்சிகளையும் அசைக்க முடியவில்லை.
ஆனால், நாங்கள் எங்கள் பாதையில் எடுத்து இருக்கும் நோக்கத்தோடு உறுதியாக பயணித்து கொண்டு போக வேண்டிய தேவை தான் நாம் தமிழர் கட்சிக்கு இருக்கின்றது.
அதனால். நாங்கள் தற்காலிக தோல்வியை பற்றியும், எதை பற்றியும் கவலைப்படவில்லை. இலக்கை முடிவு செய்து தான் நாங்கள் பயணிக்கின்றோம், எங்களுக்கு பாதை சரியாக உள்ளது, பயண தூரம் தான் சற்று அதிகமாக உள்ளது.
அதனால், பதறாமலும், சிதறாமலும் உளவு சக்தியாகவும், பிளவு சக்தியாகவும் இல்லாமல் கவனமாக நடந்த போக வேண்டிய தேவை தான் இருக்கின்றது.
அதனால் தான் நாங்கள் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை, என்னை வெல்ல வைத்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது, தோல்வியடைய வைத்தாலும் என்னுடைய வருத்தமும் துயரமும் அவங்களுக்கு தான்.
அதனால், தான் நங்கள் துணிந்து மாற்று அரசியல், மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி நாமே மாற்று நாம் தமிழரே மாற்று, திராவிட கட்சிக்கு மற்றொரு திராவிட கட்சி மாற்றாக இருக்க முடியாது என சீமான் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval