Wednesday, May 25, 2016

பரபரக்க வைக்கும் பறக்கும் தட்டு (UFO – Unidentified Flying Object)

Image result for flying saucerபூமியை தவிர்த்து ஏலியன்ஸ் எனப்படும் வேறுகிரகவாசிகள் வசிக்கும் வேற்றுக்கிரகம் ஏதேனும் உண்டா? அது பற்றி திருக்குர்'ஆனில் ஏதேனும் வசனங்களில் சொல்லப்பட்டுள்ளனவா? பறக்கும் தட்டு (UFO – Unidentified Flying Object) மூலம் வேற்றுகிரகவாசிகள் அவ்வப்பொழுது பூமிக்கு வந்து செல்வதாக பரவலாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் (காணொளி/ அச்சு ஊடகம்) மூலம் உலகம் முழுவதும் ஆங்காங்கே உலவி வருகின்றனவே? சமீபத்தில் பாரீஸிலிருந்து எகிப்து நோக்கி சென்ற‌ எகிப்து விமானம் ஒன்று நடுவானில் விபத்துக்குள்ளாகி மத்திய தரைக்கடலில் விழுந்து விமானிகளுடன் 66 பயணிகளும் மரணம் அடைந்த சம்பவம் கூட அவ்விமானத்தின் மேல் பறந்த பறக்கும் தட்டு தான் காரணமாக இருக்கக்கூடும் என அதை தூரத்திலிருந்து வேறொரு விமானத்தில் கண்ட துருக்கி நாட்டு விமானிகள் தங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறியதாக சொல்லப்படுகின்றனவே? அது எந்தளவுக்கு உண்மை? என தெரியவில்லை. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசாவும் இதுவரை வேற்றுக்கிரகவாசிகள் பற்றியோ அல்லது அவர்களின் வாகனமாய் சொல்லப்படும் பறக்கும் தட்டு பற்றியோ ஆன‌ மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமலேயே இருந்து வருகிறது.
காரணம் என்னவென தெரியவில்லை.

சாதாரன இரு சக்கர வாகன பயணம் கூட இன்றைய நாட்களில் பாதுகாப்பானதாக இருப்பதில்லை. அப்படி இருக்க, உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் தொலைதூர‌ விமான பயணங்கள் பற்றி என்ன சொல்வது? நாம் எப்படியெல்லாம் அடக்கம், ஒடுக்கமாய் இறைவனை பிரார்த்தித்து பயணப்பட வேண்டும்?
சமீபத்தில் தமிழ் நாளிதழ் ஒன்றில் படித்தது ஏர் இந்தியா விமான சேர்மன் ஒரு புது கட்டளையை பிறப்பித்து இருப்பதாக வந்த தகவல் என்னவெனில், இனி ஏர் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் "ஜெய் ஹிந்த்" என சப்தமாய் முழக்கமிட்டு பயணிக்க வேண்டும் என்பதே. நாம் யாராக இருப்பினும், பயணம் என்பது பாதுகாப்பானதாக அமைய படைப்பினங்களை படைத்த இறைவனை பிரார்த்தித்த பின்னரே நம் ஒவ்வொரு பயணத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இதில் நாம் எந்த நாட்டவராக இருப்பினும் "நம் நாடு வாழ்க" என்று சொல்லி பயணப்படுவதில் நம்மை படைத்த இறைவன் எப்படி சந்தோசப்பட்டுக்கொள்வான்? என தெரியவில்லை. அறிவுப்பூர்வமான விடயங்களில் நம் நாடு உலக அரங்கில் பேரும், புகழும் அடைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கலாகாது

நானும் சிறுவனாக இருப்பதிலிருந்து இன்று வரை பறக்கும் தட்டு, வேற்று கிரகவாசிகள் (பாக்யா, கல்கண்டு காலம் தொட்டு) பற்றி அவ்வப்பொழுது பத்திரிக்கைகளில் படித்து தான் வருகிறேன். ஆனால் இதுவரை அது பற்றிய மர்மம் இன்னும் விலகாமலேயே உள்ளது. நானும் ஒவ்வொரு பயணத்திலும் விமானத்தின் சன்னலோர இருக்கையை விரும்பி பெற்று அதன் மூலம் வானில், கடலில், பூமியில், மேகக்கூட்டத்தில் ஏதேனும் அசாதாரன நிகழ்வுகள் நடக்கின்றனவா? என அவ்வப்பொழுது உற்று நோக்கிக்கொண்டு தான் வருவேன். இதுவரை அப்படி எதுவும் என் புறக்கண்களுக்கு அகப்பட்டதில்லை. அதற்கென உரிய பிரத்யேக தொலைநோக்கு கருவிகளும், சாதனங்களும் எனக்கு கிடைக்கப்பெற்றால் இன்னும் அது பற்றிய‌ சுவராஸ்யமான தகவல்கள் காணக்கிடைக்குமோ? விமானம் மேகக்கூட்டத்திற்குள் புகும் சமயம் அதன் இறக்கைகளின் உதறல்களையும், நடுக்கங்களையும் கண்டு பயந்தும், இறங்க இருக்கும் விமான நிலையம் வரும் முன்னர் விமானத்தின் உயரத்தை திடீரென குறைத்து தாழ்வாக பறக்கும் பொழுதும் கண்களை மூடி அல்லாஹ்வை அழைத்திருக்கிறேன்.
எல்லா மர்மங்களையும், உலகமாச்சர்யங்களையும் அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
நெய்னா.
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval