Sunday, May 22, 2016

யார் இந்த பிணராய் விஜயன்

1971ல் RSS கேரளத்தில் வேரூன்ற நினைத்த சமயம் , கேரளத்தில் கம்யூனிசத்தை ஒழித்தால் நமக்கு வேரூன்றி விடலாம் என்று நினைத்து அவர்களின் குலத்தொழிலான மதகலவரத்தை தொடங்க நினைத்தது RSS . அதன்படி கேரளத்தில் கம்யூனிசத்தின் கோட்டை என கருதப்படும் கண்ணூரில் இருந்து தொடங்க நினைத்தது . இதன் முதல் கட்டமாக தலசேரியில் சாமி ஊர்வலத்தில் முஸ்லீம்கள் செருப்பு எறிந்தார்கள் என்று புரளியை கிழப்பிவிட்டு ஊர்முழுக்க கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகளை சூறையாடியது RSS .
அப்போது கிளை செயலாளராக இருந்த பிணராய் என்ற பையன் ஒரு ஆட்டோவை பிடித்து ஊர் ஊராக மைக்கில் தொண்டை கீற இந்த புரளியை நம்பவேண்டாம் என்று கூறியும் RSS முஸ்லீம்களின் வீடுகளையும் சூறையாட தொடங்கி இருந்தனர் .
அப்போது முஸ்லீம்களின் பள்ளிகளின் மீது ஆக்கிரமிப்பு தடைவதற்க்கு வேண்டி தோழர்கள் இரண்டு பேர் வீதம் எல்லா பள்ளிகளிலும் காவல் இருந்தனர் ,
ஒரு பள்ளியில் காவலில் இருந்த இருவர் இரவின் அயர்வில் கண்அயர்ந்தபோது இருட்டில் மறைந்து வீச்அருவாளுடன் வந்த சங்கபரிவார் அந்த இருவரையும் வெட்டி சாய்த்தது அதில் அந்த இடத்திலையே தோழர் யூ.கே குஞ்சுராமனின் உயிர் போனது கூடே இருந்த தோழரின் உடல் முழுக்க வெட்டப்பட்ட நிலையில் வீழ்ந்து கிடந்தும் உயிர் மட்டும் ஏனோ பாக்கியானது அன்று உயிர் போய் வந்த அந்த இளைஞர் தான் இன்றைய கேரளா முதலமைச்சர் பிணராய் விஜயன் .
இன்று இந்தியாவில் இருக்கும் கருத்து மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது .
"நன்றி மறப்பது நன்றன்று
நன்றல்ல அன்றே மறப்பது நன்று".......அ.மா
நன்றி
அப்துல் மாலிக்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval